சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? சுவையான அடை தோசை செய்துப்பாருங்க

காலை உணவாக தினமும் இட்லி, தோசை, பொங்கல், பூரி சாப்பிட்டு சளிப்பாகிவிட்டதா? கவலை வேண்டாம் ஊட்டச்சத்துக்கள் பல அடங்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சுவையான அடை தோசை செய்து சாப்பிடுங்க. ருசி வேற லெவலில் இருக்கும்.
image

ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் என்ன சமைக்கலாம்? என்று அம்மாக்கள் புலம்புவதை அனைவரும் கேட்டிருப்போம். ஏதாவது ருசியாக செய்து தர வேண்டும் என்று நினைத்தாலும் செய்வதைக் குறை சொல்லும் போது அவர்களுக்குக் கடுப்பாகிவிடும். இதற்காக தோசை, இட்லி என செய்துவிட்டு விதவிதமான சட்னி வைத்துக் கொடுப்பார்கள். ஆனாலும் வழக்கம் போல ஒரே ரெசிபியா? என்று கேட்டு சளித்துப்போய்விடும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருந்தால் ஒரே ஒரு முறையாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ருசியான அடை ரெசிபி செய்துப் பாருங்க. ஒருமுறைக் கூட செய்துப் பார்த்தது இல்லையென்றால் உங்களுக்கான ஊடடச்சத்துள்ள ரெசிபி டிப்ஸ் இங்கே.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை:

உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ஊட்டச்சத்துள்ள அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேவையானப் பொருட்கள்:

  • கேப்பை மாவு - அரை கப்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சீரகம்- சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - 10
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - சிறிதளவு

sweet potato recipes

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை செய்முறை:

  • காலை உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து அடை தோசை செய்ய வேண்டும் என்றால், முதலில் கிழங்கை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொண்டு, வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு சீரகம், மிளகு, கறிவேப்பிலை, சின்ன சின்னதாக அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பிசைந்துக் கொண்டால் போதும். அடை செய்வதற்கான மாவு ரெடி.
  • இதையடுத்து தோசைக் கல்லை சூடேற்றி, பிசைந்து வைத்துள்ள மாவை அடையாக தட்டிப் போட வேண்டும்.
  • இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை ரெசிபி ரெடி.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள், புரோட்டீன், கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, அயர்ன் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடும் போது வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு செரிமானப் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP