மணக்கும் நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு மற்றும் அவியல்; சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இங்கே

நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கூட்டாஞ்சோறு மற்றும் அவியல் ரெசிபியை அதன் சுவை மாறாமல் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த கட்டுரையில் அறிந்துக் கொள்ளலாம்.
image

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஸ்பெஷல் ரெசிபிகள் உண்டு. அதிலும் தென் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், உணவுப் பொருட்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் இன்றைக்கு நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு மற்றும் அவியல் எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு:

கூட்டாஞ்சோறு என்றவுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை கூட்டாஞ்சோறு என்றால் காய்கறிகள் மற்றும் அரிசி, பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைத்து சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்று.லெமன் சாதம், தயிர், தக்காளி, பிரியாணி போன்ற பல வைரட்டி ரைஸ்கள் இருந்தாலும் நெல்லை மாவட்ட மக்களின் ஸ்பெஷல் ரெசிபியாக இன்றைக்கும் உள்ளது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கூட்டாஞ்சோறு.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி / புழுங்கல் அரிசி - 2 கப்
  • துவரம் பருப்பு - 1 கப்
  • பெருங்காயத் தூள்- 1 டீஸ்பூன்
  • வாழைக்காய் - 1
  • கேரட் - 2
  • உருளைக்கிழங்கு - 2
  • முருங்கைக்காய் - 2
  • சீனிவரக்காய்- 20 கிராம்
  • கத்தரிக்காய் - 4
  • அரைக்கீரை - சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • சீரகம் - 50 கிராம்
  • மிளகாய் வத்தல் - 5
  • தேங்காய் துருவல் - 1 கப்

கூட்டாஞ்சோறு செய்முறை:

  • கூட்டாஞ்சோறு ரெசிபி செய்வதற்கு முதலில் இதற்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சீரகம், பூண்டு, மிளகாய் வத்ததல், சின்ன வெங்காயம் போன்றவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு செய்வதற்காக, எடுத்து வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:கொங்கு ஸ்பெஷல் புளி வடை ரெசிபி; வீட்டு விருந்தாளிக்கு செஞ்சு கொடுங்க

  • பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் துவரம் பருப்பைப் பத்து நிமிடங்கள் ஊற வைத்து வேக வைக்க வேண்டும். பாதி பருப்பு வெந்தவுடன் அனைத்து காய்கறிகளையும் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேனைக்கிழங்கு உங்களுக்குப் பிடிக்கும் என்றால், காய்கறிகளுக்கு முன்னதாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து 2 கப் அரிசியையும் கழுவி காய்கறிகள் மற்றும் பருப்புடன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சீரகம், பூண்டு, மிளகாய் வத்ததல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துள்ள மாசாலா கலவை, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி மற்றும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • சாதம் நன்கு கொதித்தவுடன் மிதமான சூட்டில் தம் கட்டி வைத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கூட்டாஞ்சோறு ரெடி. ஒருவேளை நீங்கள் குக்கரில் வைக்கப்போகிறீர்கள் என்றால் காய்கறிகளையெல்லாம் நன்கு வதக்கிய பின்னதாக அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 2 அல்லது 3 விசில் வரை வந்தால் போதும்.
  • இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டினால் போதும் நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு ரெடி.

நெல்லை ஸ்பெஷல் அவியல்:

  • தென் மாவட்ட மக்களின் மிகவும் விருப்பமான அவியல் செய்வதற்கு முதலில் கேரட், பீன்ஸ், சீனிஅவரைக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போன்றவற்றைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த காய்கறிகள் அனைத்தையும் ஓரளவிற்கு பெரியதாக நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்னர் அவியலுக்கு சுவை அதிகரிக்கும் மசாலாவை அரைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் சீரகம், பூண்டு, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

avial

  • காய்கறிகள் ஓரளவிற்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கிவிடவும்.

avial recipe..

  • இறுதியாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்துக் கொட்டினால் போதும் சுவையான நெல்லை மாவட்ட அவியல் ரெடி.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP