கொங்கு ஸ்பெஷல் புளி வடை ரெசிபி; வீட்டு விருந்தாளிக்கு செஞ்சு கொடுங்க

மாலை நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் இந்த கொங்கு ஸ்பெஷல் புளி வடை செஞ்சு கொடுங்க. இதுவரை இப்படியொரு வடை சாப்பிட்டதில்லை என பாராட்டுவார்கள். கொங்கு ஸ்பெஷல் புளி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
image

கொங்குநாடு சமையலில் பல ருசியான உணவுகள் உள்ளன. ஒவ்வொன்றையும் செய்து ருசிப்பதற்கு நமக்கு நேரம் தான் போதாது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் மாலை நேரத்தில் கிடைக்ககூடிய கொங்கு ஸ்பெஷல் புளி வடை ரெசிபியை இந்த பதிவில் பார்க்க போகிறோம். புளி வடை பண்டிகை கால உணவு கிடையாது. பலரது வீட்டில் அடிக்கடி தயாரிக்க கூடிய ஸ்நாக் வகை. அடுத்த தலைமுறையினரிடம் புளி வடை செய்முறையை கடத்த தவறியதால் இது பாட்டி காலத்து தின்பண்டம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.

puli vadai recipe

கொங்கு புளி வடை செய்ய தேவையானவை

  • புழுங்கல் அரிசி
  • துவரம் பருப்பு
  • கடலை பருப்பு
  • சின்ன வெங்காயம்
  • வர மிளகாய்
  • சீரகம்
  • கடலெண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி
  • துருவிய தேங்காய்
  • கறிவேப்பிலை

குறிப்பு : வடைக்கு இட்லி அரிசி பயன்படுத்தினால் அதன் பக்குவம் மாறிவிடும்.

கொங்கு புளி வடை செய்முறை

  • அரை கிலோ புழுங்கல் அரிசி, 200 கிராம் துவரம் பருப்பு, 120 கிராம் கடலை பருப்பு எடுத்து தண்ணீரில் நன்கு அலசி தண்ணீரில் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இவை ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் அரைப்பதற்கு தயாராகுங்கள். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காதீர்கள். ஏனெனில் வடை சரியாக வராது.
  • இதோடு 125 கிராம் சின்ன வெங்காயம், 6 வர மிளகாய், மூன்று ஸ்பூன் சீரகம், பாதி எலுமிச்சை சைஸ் புளி, தேவையான அளவு கறிவேப்பிலை, கால் மூடி துருவிய தேங்காய், தேவையான அளவு கொத்தமல்லி போட்டு கலந்து விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
  • 90 விழுக்காடு அரைத்தால் போதுமானது. அரைத்து எடுத்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து புளி வடை செய்ய தயாராகுங்கள்.
  • கடாயில் அரை லிட்டர் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். எண்ணெய் சூடானதும் வாழை இலையில் எண்ணெய் தடவி வடை மாவு எடுத்து தட்டி கடாயில் போடுங்கள்.
  • பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும். மழைக்காலத்தில் புளி வடை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இது கொஞ்சம் புளிப்பும் காரமும் கலந்தது போல் சுவைக்கும்.
  • வடையை உடைத்தால் கொஞ்சம் ஆவி வரும். இதை அப்படியே சாப்பிடலாம். சட்னி, சாம்பார் எதுவும் தேவையில்லை.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP