மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை கீரை வடை ; அட்டகாசமான மாலை ஸ்நாக்

மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடையின் செய்முறை பற்றி பார்க்கலாம். வீட்டில் யாருக்காவது சளி பிடித்திருந்தால் முள்ளு முருங்கை வடை தயாரித்து பொடி தூவி எண்ணிக்கையில் 4-5 கொடுங்கள். அன்றே முள்ளு முருங்கை தனது வேலையை காட்டும்.
image

தூங்காநகரமான மதுரையில் பலரும் ருசிக்க தவறும் உணவுகளில் முள்ளு முருங்கை வடையும் ஒன்று. பச்சை நிற பூரி போல் தெரியும் முள்ளு முருங்கை வடை உடலுக்கு மிகவும் நல்லது. இந்த முள்ளு முருங்கை இலை சளியை கரைக்கும் தன்மை கொண்டது. மதுரையில் மஹால், விளக்குத்தூண், முனிச்சாலை, தெப்பக்குளம் உட்பட பல பகுதிகளில் இந்த முள்ளு முருங்கை வடை கிடைக்கும். மாலை நேரத்தில் சுடாக எண்ணெயில் வறுத்து ஒரு விதமான பொடியை தூவி தருவார்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

mullu murungai vadai

முள்ளு முருங்கை வடை செய்ய தேவையானவை

  • முள்ளு முருங்கை இலை
  • புழுங்கல் அரிசி / பச்சரிசி
  • உளுத்தம் பருப்பு
  • பொட்டுக்கடலை
  • வர மிளகாய்
  • மிளகு
  • சீரகம்
  • உப்பு

முள்ளு முருங்கை வடை செய்முறை

ஒரு கப் புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். கீரை விற்பனையாளர்களிடம் இந்த முள்ளு முருங்கை இலைகளை கேளுங்கள் கிடைக்கும். ஒரு கட்டு வாங்கி தண்ணீரில் கழுவுங்கள்.

இப்போது கிரைண்டரில் ஒரு கப் புழுங்கல் அரிசி, காம்பு கிள்ளிய முள்ளு முருங்கை இலைகள், இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 5 பல் பூண்டு போட்டு அரைக்கவும். தண்ணீர் அதிகமாக ஊற்றாதீர்கள். கெட்டியான பதத்திலேயே மாவு அரைக்கவும்.

இதன் மீது தொட்டு சாப்பிடுவதற்கான பொடி தயாரிக்க ஒரு பேனில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு எண்ணெய் இன்றி 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

அதன் பிறகு மிக்ஸியில் இவை அனைத்தையும் போட்டு 2 வர மிளகாய், கொஞ்சம் உப்பு, கால் கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும். இந்த பொடியை சாதத்தில் பிரட்டி கூட சாப்பிடலாம்.

கிரைண்டரில் மாவு அரைத்த பிறகு ஒரு வெள்ளைத் துணியில் மினி பூரி சைஸில் எண்ணெய் அல்லது தண்ணீர் தொட்டு தட்டுங்கள்.

கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு போட்டு இரு பக்கமும் வேக விட்டு எடுங்கள். சிறிது நேரத்திலேயே முள்ளு முருங்கை வடை தயாராகிவிடும். இப்போது அந்த பொடியை மேலே தூவி சாப்பிட்டு பாருங்கள்.

மேலும் படிங்கவட சென்னை ஸ்பெஷல் அட்லாப்பம் செஞ்சு ருசிங்க

இது மொறுமொறுப்பாக இருக்காது; எனினும் சுவை நன்றாக இருக்கும். ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP