திருக்கார்த்திகை ஸ்பெஷல்: உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பனையோலைக் கொழுக்கட்டை!

பனையோலைக் கொழுக்கட்டையும், பொரி உருண்டை பிரசாதமும் தீபத் திருநாளின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. இதோ உங்களுக்காகவே இந்த ரெசிபி டிப்ஸ்...

Main koli

தீபத்தின் ஒளிகள் எப்போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரகாசத்தைக் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாள் தீபத்திற்கு ஏற்ற நாளாகவே விளங்குகிறது. இந்த நாளை ஒவ்வொரு தமிழர்களும், தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பெரிய கார்த்திகை எனப்படும் தீபத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.

inside  koli

இந்த நாளில் நமது முன்னோர்கள் பண்டைய காலம் தொட்டே மாலை வேளைகளில் வீட்டிற்கு உள்ளேயும் வாசல்களிலும் விதவிதமான விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இவ்வாறு இத்திருநாளில் தீபங்கள் ஏற்றுவது, கோவில்களில் சொக்கப்பனை எரிப்பது என்பது போன்ற பழக்க வழக்கங்கள் எப்படி சிறப்பானதோ? அதுப்போன்று தான் பனையோலைக் கொழுக்கட்டையும், பொரி உருண்டை பிரசாதமும் இந்த நாளின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. இதோ நீங்களும் இந்நாளில் இந்த பனையோலைக் கொழுக்கட்டைகளை வீடுகளில் செய்து தீப ஒளியைக் கொண்டாட வேண்டுமா,? இதோ உங்களுக்காகவே இந்த ரெசிபி டிப்ஸ்...

பனையோலை கொழுக்கட்டை செய்முறை

inside  koli

தேவையான பொருள்கள்

  • அரிசி மாவு - 2 கப்
  • வெல்லம் அல்லது கருப்பட்டி தூள் – 1 கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
  • சுக்கு பொடி – அரை டீஸ்பூன்
  • பனை இலைகள் – தேவைக்கு ஏற்ப
inside  koli

செய்முறை

  • முதலில் அரை கப் தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டியைப் பொடியாக்கி நன்கு கொதிக்க விடவும்.
  • பின்னர் இந்த சர்க்கரை தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.
inside  koli
  • இதையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
  • பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை பனை ஓலைகளில் அகலவாக்கில் கொழுக்கட்டைக்காகப் பிசைந்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும்.
  • மாவு வெளியே வராமல் இருப்பதற்காக, ஒரு பெரிய நூலினால் பனை இலைகளைக் கட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு இட்லி தட்டில் வைத்து பத்து அல்லது இருபது நிமிடங்கள் நீராவியில் வேக வைத்து எடுத்தால் போதும்.
  • சுவையான பனையோலைக் கொழுக்கட்டை ரெடி.

பச்சை பனை ஓலை வாசனையுடன் உடலுக்கு ஆரோக்கியத்தைச் சேர்க்கும் இந்த பனையோலை கொழுக்கட்டையை இதுப்போன்ற வழிமுறைகளோடு வீடுகளில் மிகவும் சுலபமாக நீங்கள் செய்ய முடியும். அதிலும் சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்துள்ள இந்த ரெசிபி மேற்கொள்ளப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு குளிர்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP