கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் எந்தவிதத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையான உணவு வகைகளின் சொர்க்கமாகவும் உள்ளது. கேரளாவில் கிடைக்கும் இனிப்புகள் அவற்றின் தனித்துவத்திற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் பாரம்பரிய இனிப்புகள் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வகையில் இருக்கும். கேரளாவிற்கு நீங்கள் சென்றால் தவறாமல் இந்த இனிப்புகளை ருசியுங்கள்.
ரவா லட்டு
ரவா லட்டு என்பது வறுத்த ரவா அல்லது ரவை, நெய், சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரபலமான தென்னிந்திய இனிப்பாகும். ரவையின் மொறுமொறுப்பான அமைப்பு மற்றும் ஏலக்காயின் நறுமணம் ஆகியவை ரவா லட்டுவை தவிர்க்க முடியாத இனிப்பாக மாற்றுகிறது.
பாயாசம்
கேரளாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய இனிப்பு வகைகளில் பாயாசம் முக்கியத்துவம் வாய்ந்தது. தென் இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகைகளிலும் அனைவரது வீடுகளிலும் நிச்சயம் பாயாசம் தயாரிக்கப்படும். இது அரிசி, சர்க்கரை, பால், ஏலக்காய் ஆகியவற்றை சுடவைத்து தயாரிக்கப்படுகிறது. பாயாசத்தில் பல வகையான பாயாசங்கள் உள்ளன. இதைச் சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பொடிதாக்கப்பட்ட முந்திரியுடன் சேர்த்து பருகலாம்.
மேலும் படிங்கஆரோக்கியமான காலை உணவுக்கு தேடலா ? ராகி சில்லா சாப்பிடுங்க
இலை அடை
இலை அடை என்பது அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் அடைத்த ரைஸ் பான்கேக் இனிப்பாகும். இவை அனைத்தும் வாழை இலையில் சுற்றப்பட்டு ஆவியில் வேகவைக்கப்படுகிறது.
பாலாடை பாயாசம்
இது ஓணம் ஸ்பெஷல் பாயாசமாகும். பாலாடை பாயாசத்தில் சில எளிய பொருட்கள் இருந்தாலும் மிகச் சுவையாக இருக்கும். கொண்டாட்டங்கள் மற்றும் மிகழ்ச்சிகரமான தருணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் தயாரிப்புக்குப் பிறகு நறுக்கிய பாதாம் அல்லது முந்திரி பருப்புகள் சேர்க்கப்படும்.
மேலும் படிங்ககுளிர்காலத்திற்கு உகந்த ருசியான மிளகு குழம்பு!
வாழைப்பழ அல்வா
பழுத்த வாழைப்பழங்கள் மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி வாழைப்பழ அல்வா தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் எப்படி திருநெல்வேலி அல்வா பிரபலமோ அது போல கேரளாவில் வாழைப்பழ அல்வா மிகப் பிரபலம். இந்த அல்வா பஞ்சுபோல இருக்கும். மற்ற தென்னிந்திய இனிப்புகளிலிருந்து வாழைப்பழ அல்வா முற்றிலும் வேறுபடுகிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்…
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation