herzindagi
Main ragi

Ragi Chilla : ஆரோக்கியமான காலை உணவுக்கு தேடலா ? ராகி சில்லா சாப்பிடுங்க

ஆரோக்கியமான காலை உணவிற்கு மாற விருப்பமா ? அதற்கு ராகி சில்லா சமைத்து சாப்பிடுங்க
Editorial
Updated:- 2023-12-20, 13:31 IST

நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவைத் தேடுகிறீர்களானால், இதற்கு ராகி சில்லா சரியான தேர்வாகும். புதினா சட்னியுடன் ராகி சில்லாவை தொட்டு சாப்பிட்டு பாருங்கள், பிறகு இந்த உணவின் தீவிர பிரியராக நீங்கள் மாறிவிடுவீர்கள். இதன் செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் சுவையானது.

 ragi

ராகி சில்லா செய்ய தேவையான பொருட்கள்

இரண்டு கப் ராகி மாவு 

ஒரு ஸ்பூன் கடலை மாவு

ஒரு ஸ்பூன் வேகவைத்த சோளம்

அரை கப் கேரட்

வெங்காயம் (1)

சீரகப் பொடி 

உப்பு

ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய்

ஒரு ஸ்பூன் தனியா பொடி

தண்ணீர் 

தேவையான அளவு எண்ணெய் 

இதையும் படிங்க தீபாவளிக்கு இம்முறை ரசகுல்லா , காஜு கட்லி ருசி பாருங்க

ராகி சில்லா செய்முறை 

மொத்த நேரம்         : 20 நிமிடம்

தயாரிப்பு நேரம்      : 10 நிமிடம்

சமைக்கும் நேரம்    : 10 நிமிடம்

கலோரிகள்             : 125 

 ragi

இதையும் படிங்க குளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்ஸ்

செய்முறை 

  • ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ராகி மாவு , கடலை மாவு , சீரகப் பொடி , தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  • தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கலக்கவும்
  • அடுத்ததாக மாவுடன் வேகவைத்த சோளம்,வெங்காயம்,பச்சை மிளகாய்,கேரட் ஆகியவற்றை சேர்க்கவும்
  • நான்-ஸ்டிக் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , கடாய் சூடான பிறகு கலந்து வைத்திருக்கும் மாவை தோசை போல் வேக வைக்கவும்
  • இருபுறமும் நன்றாக வேகும் வரை சமைக்கவும்
  • ராகி சில்லா ரெடி , உங்களுக்கு பிடித்தமான சட்னியுடன் அதை தொட்டு சாப்பிடுங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]