Diwali Sweets:தீபாவளிக்கு எப்பவும் முறுக்கு , குலாப் ஜாமுன் , ஜிலேபி தானா ? இம்முறை ரசகுல்லா , காஜு கட்லி ருசி பாருங்க…

தீபாவளினாவே பலகாரம்தான்  ஸ்பெஷல் அதிலும் ஸ்பெசலா ரசகுல்லா, காஜூகட்லி  சுவைபோம் வாங்க

ok

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகளுக்கு அடுத்தபடியா எல்லாருடைய மனதிலேயும் தோன்றுவது இனிப்புகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும்போது முறுக்கு, குலாப் ஜாமுன், கார சேவு தயாரிக்கிறது வழக்கம். இம்முறை கொஞ்சம் நார்த் இந்தியன் இனிப்புகள் செய்யலாம்னு நினைக்கிறீங்களா. அப்போ நீங்க இதைச் செஞ்சு பாருங்க…

ஒளிகளின் பண்டிகளை என்றழைக்கப்படும் தீபாவளியை சிறப்பா கொண்டாட எல்லாருக்கும் அளவற்ற ஆசை இருக்கும். புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடிப்பது மட்டுமின்றி வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு லட்டு, குலாப் ஜாமுன் என வகை வகையான இனிப்புகளைப் பகிர்ந்தளித்து கொண்டாடுவது தீபாவளி பண்டிகையை மேலும் சிறப்பாக்கும்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் வித விதமான ஆடைகள், கடந்த முறை வாங்க தவறிய பட்டாசுகளை இந்த முறை வாங்கியே ஆகணும்னு ஞாபகம் வச்சு வாங்குறோம். ஆனா இனிப்புகளுக்கு மட்டும் விதிவிலக்கு. எப்பவும் அதே முறுக்கு, குலாப் ஜாமுன், ஜிலேபி, மிக்சர் சாப்பிட்டு போர் அடிச்சு இருக்கும். அதனால இம்முறை நார்த் இந்தியன் இனிப்புகளைச் செஞ்சு பாருங்க.

ரசகுல்லா

ரசகுல்லா செய்யத் தேவையான பொருட்கள்

கொழுப்பு நிறைந்த பால்

எலுமிச்சை சாறு அல்லது வினிகர்

தண்ணீர்

தேவையான அளவு சர்க்கரை

ரசகுல்லா செய்வதற்கு முதலில் பாலாடைக்கட்டி தயாரிக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு அதிகம் நிறைந்த பால் தேவை.

பால் நன்கு கொதித்த பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்ப்பது அவசியம், அப்படி சேர்ப்பதால் ஏற்படும் அமிலத்தன்மை பாலை தயிராக மாற்றும்.

பால் தயிராக மாறியவுடன் அதனை வடிகட்டத் தயாராகி கொள்ளுங்கள்.அடுத்ததாக ஒரு துணிக்குள், தயிரை போட்டு நன்கு பிழியவும். இப்படி வடிகட்டுவதன் மூலம் தண்ணீர் வெளியேறும்.

ஏறக்குறைய பாதி வேலை முடிந்து விட்டது. துணிக்குள் இருக்கும் பாலாடைக்கட்டியை சிறு சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

மிகச் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ பாலாடைக்கட்டியை உருட்டி விடக் கூடாது ஏனென்றால் இறுதியில் ரசகுல்லா பக்குவம் வராது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

ஜீரா நிலையை அடைந்த பிறகு, உருட்டிய உருண்டைகளை அதனுள் ஒன்றன் பின் ஒன்றாகப் போடுங்கள்.

ஒரு மணி நேரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் ருசியான ரசகுல்லா தயார்.

காஜு கட்லிகாஜு கட்லி செய்யத் தேவையான பொருட்கள்

தரமான முந்திரி பருப்புகள்

தண்ணீர்

ஒரு கப் பால்

சில்வர் லைனின்

தேவையான அளவு சர்க்கரை

தேவையான அளவிற்கு தரமிகுந்த முந்திரி பருப்புகளை எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் போட்டு இரண்டு முறை முதல் மூன்று முறை நன்கு கழுவவும். இதன் மூலம் முந்திரி பருப்புகளிலிருந்து நிறமூட்டி, அழுக்கு ஆகியவை அகலும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் முந்திரி பருப்புகளை தண்ணீரில் போட்டு , இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஊரவைக்கவும். அப்போது ஒரு கப் பாலையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் முந்திரி பருப்புகள் சற்று பளபளக்கும். அதே நேரத்தில் அவை மென்மையாகவும் இருக்கும், உலர்ந்தும் விடாது.

பிறகு தண்ணீர் மற்றும் பாலில் ஊறிய முந்திரி பருப்புகளை வெளியே எடுத்து, மிக்ஸி ஜாரில் போடவும்.

மிக்ஸியில் அரைக்கும்போது எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்க கூடாது. சரியான வேகத்தில் மிக்ஸியை இயக்கிப் பேஸ்ட் போன்ற வடிவம் பெறும் வரை முந்திரி பருப்புகளை அரைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு பேனில் முந்திரி பேஸ்டை போட்டு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். முந்திரி பேஸ்டில் சர்க்கரை நன்கு சேரும் வரை கிண்டவும். அதன் பிறகு முந்திரி பேஸ்ட்டை குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.

இறுதிக்கட்ட செய்முறைக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.

பேனில் முந்திரி பேஸ்ட்டை சூடுபடுத்தும்போது நெய் அல்லது எண்ணெய் சேர்க்க கூடாது.

di swee

முதலில் பேனுடன் ஒட்டிக் காணப்படும் முந்திரி பேஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து பிரியத் தொடங்கும். அது தயாராகி விட்டதா என்பதை கண்டறிய சிறிதளவு முந்திரி பேஸ்ட்டை கையில் எடுத்து உருண்டையாக்க முயற்சி செய்யவும்

எளிதில் உருண்டையாக்க முடிகிறது என்றால் அத்துடன் சூடுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையெனில் தொடர்ந்து சூடுபடுத்தவும்.பின்னர் ஸ்டீல் பாத்திரத்தில் வெண்ணெய் வைத்து, அதன் மீது முந்திரி பேஸ்ட்டை படரச் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து அதனுடன் சில்வர் லைனின் சேர்த்து டைமண்ட், சிலிண்டர் உள்ளிட்ட வடிவங்களில் வெட்டினால் போதும் சுவையான காஜு கட்லி ரெடி.

இரண்டு நார்த் இந்தியன் இனிப்புகளையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து அளித்துத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள்.ரசமலாய்

ரசமலாய் செய்யத் தேவையான பொருட்கள்

பாலாடைக்கட்டி தயாரிக்க ஒரு லிட்டர் பால்

அரை எலுமிச்சை அல்லது 2 ஸ்பூன் வினிகர்

2 கப் சர்க்கரை

அரை ஸ்பூன் குங்குமப்பூ

பொடிதாக்கப்பட்ட பிஸ்தா

ஏலக்காய் தூள் மற்றும் பாதாம்

முதலில் பாலாடைக்கட்டி தயாரிப்பதற்கு ஒரு லிட்டர் பால் எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பேனில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

பால் நன்கு கொதித்தவுடன் பேனை ஆஃப் செய்து விட்டு, அதில் அரை எலுமிச்சையை பிழியுங்கள் அல்லது 2 ஸ்பூன் வினிகர் சேருங்கள்.

அடுத்ததாக ஒரு துணிக்குள் கொதித்த பாலை ஊற்றி அதனுள் இருக்கும் நீரை வெளியேற்றுங்கள். சுமார் 40 நிமிடங்களுக்குப் பால் இருக்கும் துணியைக் கட்டி வைத்துத் தொங்க விடவும்.

தற்போது கிடைக்கும் பாலாடைக்கட்டியை சிறிது சிறிதாக உருட்டி உருண்டையாக்கவும், அதில் விரிசல்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதனிடையே மற்றொரு பேனில் பால் ஊற்றி, அது சற்று க்ரீம் மற்றும் கெட்டியான நிலையை அடையும் வரை கொதிக்க விடுங்கள்.

அடுத்ததாகக் கொதித்து கொண்டிருக்கும் பாலுடன் பொடிதாக்கப்பட்ட பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பருப்புகள் சேர்த்து நன்றாகக் கிண்டவும்.

பிறகு அதனுடன் ஒரு கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்களுக்குக் கிண்டிவிட்டு பேன்னை ஆஃப் செய்து விடுங்கள்.

மற்றொரு பேனில் சர்க்கரை பாகு தயாரிக்க தண்ணீரில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

தற்போது மிதமான சூட்டில் சர்க்கரை பாகினுள் சிறிதாக உருட்டப்பட்ட பாலாடைக்கட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். சுமார் 15 நிமிடங்களுக்கு இந்தப் பணியைத் தொடருங்கள்.

பிறகு பேனை ஆஃப் செய்து விட்டு, பாலாடைக்கட்டி உருண்டைகளை ஆறும் வரை காத்திருங்கள்.

இறுதியாக ஸ்பூனை பயன்படுத்தி பாலாடைக்கட்டி உருண்டைகளுக்குள் இருக்கும் சர்க்கரை பாகினை வெளியேற்றியபிறகு, முன்னதாகத் தயாரிக்கப்பட்ட பிஸ்தா பாலில் போடவும். இவற்றைப் பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டிய பிறகு, ருசித்து மகிழுங்கள்.

Image Source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP