வட சென்னை பகுதியில் வாழும் மக்கள் அட்லாப்பத்தை இந்தியன் பீட்ஸா என்றழைக்கின்றனர். இந்த உணவு 100 ஆண்டுகளுக்கும் பழமையானது. அன்றைய நார்த் மெட்ராஸ் பகுதியில் வாழ்ந்த மீன சமுதயா பெண்மணி அட்லாப்பத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அட்லாப்பம் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காசிமேடு மீன் சந்தையில் சென்றால் அட்லாப்பத்தை சுட சுட ருசிக்கலாம். இதை வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
வட சென்னை அட்லாப்பம் செய்ய தேவையானவை
- பச்சரிசி
- சர்க்கரை
- கடலைப் பருப்பு
- பாதாம்
- உலர் திராட்சை
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- ஜாதிக்காய் பொடி
- தேங்காய்
- நெய் + எண்ணெய்
- டால்டா
- தண்ணீர்
- மண்
மேலும் படிங்கஐதராபாத் பகாரா ரைஸ் செய்ய தெரியுமா ? பிரியாணியை விட செம்ம ருசி
வட சென்னை அட்லாப்பம் செய்முறை
- முதலில் 200 கிராம் பச்சரிசி எடுத்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் இட்லி, தோசை மாவு போல் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- இதற்கு நேரம் இல்லாத நபர்கள் 200 கிராம் அரைத்த பச்சரிசி மாவை கடையில் வாங்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- அட்லாப்பம் செய்யும் முறை எளிதானது. எனினும் சற்று வித்தியாசமானது. மண் பாத்திரத்தில் கால்வாசி அளவிற்கு மணல் கொட்டி நன்கு சூடுபடுத்தவும்.
- இப்போது அரைத்த பச்சரிசி மாவில் 100 கிராம் சர்க்கரை, அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மிளகு தூள், வேகவைத்த 50 கிராம் கடலைப் பருப்பு, கால் ஸ்பூன் ஏலக்காய் தூள், கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி போட்டு கலந்துவிடுங்கள்.
- மண் பாத்திரத்தில் மண் சூடானதும் அதன் மீது சதுர வடிவ அலுமினிய பாத்திரம் வைத்து இரண்டு ஸ்பூன் நெய்- எண்ணெய் கலவையை ஊற்றவும். அதன் மீது இரண்டு கரண்டி மாவு ஊற்றுங்கள்.
- சிலருக்கு டால்டா பயன்படுத்துவதில் விருப்பம் இருக்காது. அதன் காரணமாகவே நெய் - எண்ணெய் கலவை பயன்படுத்துகிறோம்.
- மாவின் மீது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை, பாதாம், தேங்காய் சில்லு போட்டு கலந்து விட்டு மண் பாத்திரத்தை மூடுங்கள். இதன் மீது மற்றொரு மண் பாத்திரம் வைத்து அதனுள் சூடான அடுப்பு கரி போடவும். இதனால் அட்லாப்பம் இரு பக்கமும் வேகும்.
- குக்கரில் செய்தால் 12 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
இதுவே வடசென்னை ஸ்பெஷல் அட்லாப்பம் செய்முறை. இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation