குக் வித் கோமாளி ஆறாவது சீசன் ஏழு போட்டியாளர்களுடன் பயணித்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் சவுந்தர்யா சில்லுக்குரி, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா எலிமினேட் ஆகியுள்ளனர். சென்ற வாரத்தில் கல்யாண விருந்தை தொடர்ந்து இந்த வாரம் நடுவர்களின் சமையலை மறுஉருவாக்கம் செய்ய போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கப்பட்டது. இதில் கோமாளி குரேஷிக்கு ஜாக்பாட் அடித்தது எப்படி என பார்ப்போம்.
குக் வித் கோமாளி பேரிங்
இந்த வாரம் கோமாளிகள் போட்டியாளர்கள் போல வேடமிட்டு வந்திருந்தனர். உமர் ஆக குரேஷி, லட்சுமி ராமகிருஷ்ணனாக ராமர், பிரியா ராமன் போல் சவுண்ட் சவுந்தர்யா, ஷபானா ஆக புகழ், ரக்ஷன் போல் சர்ஜுன், மதுமிதா ஆக சுனிதா, கஞ்சா கருப்பாக சரத் வேடமிட்டு இருந்தனர். மியூசிக்கல் சேர் விளையாடி குக் - கோமாளி பேரிங் செய்யப்பட்டனர். அதன்படி மதுமிதாவுடன் சர்ஜுன், ராஜு ஜெயமோகனுடன் சவுண்ட் சவுந்தர்யா, லட்சுமி ராமகிருஷ்ணனுடன் குரேஷி, ஷபானாவுடன் புகழ், உமருடன் சரத், நந்தகுமாருடன் சுனிதா இணைந்தனர்.
செஃப் ஆப் தி வீக் லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்த வாரம் நடுவர்கள் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கெளஷிக், செஃப் தாமு தலா ஒரு உணவை தயாரித்து அதை போட்டியாளர்கள் மறுஉருவாக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் வடமாநிலங்களில் விருந்து உணவுகளுடன் தரப்படும் வெற்றிலை சாட், செஃப் தாமு நீலகிரி வெஜ் குருமா, செஃப் கெளஷிக் சாக்லேட் மூஸ் செய்திருந்தனர். இதை சரியான பக்குவத்தில் விரைவாக செய்திடும் போட்டியாளருக்கு செஃப் ஆப் தி வீக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வெற்றிலை சாட் செய்முறையில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொதப்பினாலும் நீலகிரி வெஜ் குருமா செய்முறையில் முதலிடமும், சாக்லேட் மூஸ் செய்முறையில் இரண்டாமிடமும் பிடித்து அதிக புள்ளிகளை பெற்று செஃப் ஆப் தி வீக் வென்றார். இரண்டாமிடத்தை பிரியா ராமன் பிடித்தார். மூன்று ஆண் போட்டியாளர்கள் உமர், விவசாயி நந்தகுமார், ராஜு ஆகியோர் 5,6,7 என அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். வழக்கம் போல் ராஜு டேஞ்சர் ஸோன் சென்றார்.
குரேஷிக்கு அடித்த ஜாக்பாட்
செஃப் ஆப் தி வீக் வென்ற அடிப்படையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஏசி பரிசாக கிடைத்தது. இதை அவர் தன்னுடன் சமைத்த கோமாளி குரேஷிக்கு கொடுத்தார். சில வாரங்களுக்கு முன்பு இதே போல் செஃப் ஆப் தி வீக் வென்ற போது தன்னுடைய பரிசை கோமாளி சவுண்ட் சவுந்தர்யாவுக்கு வழங்கினார்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation