வட மாநிலங்களுக்கு சென்றால் ஹோட்டல்களில் சப்பாத்தி, பரோட்டா, புலாவ், பிரியாணியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு சிக்கன் ஹண்டி கொடுப்பார்கள். சிக்கன் ஹண்டி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விவசாயி நந்தகுமார் குங்குமப்பூ சாதத்துடன் சாப்பிடுவதற்கு சிக்கன் ஹண்டி பரிமாறி செஃப் ஆப் தி வீக் விருதினை வென்றார். இதுவரை ருசித்ததில்லை என்றால் இனி வீட்டில் சிக்கன் வாங்கும் போதெல்லாம் சிக்கன் ஹண்டி செய்ய சொல்லுவீர்கள். வாருங்கள் சிக்கன் ஹண்டி எப்படி செய்வது என பார்ப்போம்.
சிக்கன் ஹண்டி செய்ய தேவையானவை
- சிக்கன்
- தயிர்
- பிரெஷ் கிரீம்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- மிளகு தூள்
- தேங்காய் சிரட்டை
- கசகசா
- முந்திரி
- ஏலக்காய்
- கிராம்பு
- பிரிஞ்சி இலை
- கசூரி மேத்தி
- நெய்
- அன்னாசி பூ
- காஷ்மீரி மிளகாய் தூள்
- காஷ்மீரி மிளகாய்
- தக்காளி
- கரம் மசாலா
- மஞ்சள் தூள்
சிக்கன் ஹண்டி செய்முறை
- அரை கிலோ சிக்கனை தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவி அதனுடன் கால் கப் தயிர், பிரெஷ் கிரீம் மூன்று ஸ்பூன், கால் டீஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள், இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
- கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும். சிறிய மண் பாத்திரத்தை நடுவே வைத்து தீ மூட்டிய தேங்காய் சிரட்டையை வைத்து அதில் அரை ஸ்பூன் நெய் ஊற்றி கடாயை மூடிவிடவும். ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற ஸ்மோக்டு வாசனை கிடைக்கும்.
- முன்னதாக 20 முந்திரியை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
- கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயம் நறுக்கி போட்டு வதக்குங்கள்.
- வெங்காயம் பாதி வதங்கியவுடன் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கசகசா, அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கசகசா, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு அன்னாசி பூ, மூன்று கஷ்மீரி மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்.
- அடுத்ததாக இரண்டு தக்காளி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
- அதன் பிறகு மசாலா பொருட்கள் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஊறவைத்த முந்திரி பருப்பு போட்டு கலக்கஅவும்.
- இரண்டு நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்தெடுங்கள்.
- மண் சட்டியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு பிரிஞ்சி இலை போட்டு அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்கவிடுங்கள்.
- இறுதியாக கால் ஸ்பூன் கசூரி மேத்தி தூவி ஒரு ஸ்பூன் பிரெஷ் கிரீம் சுற்றி ஊற்றி மீண்டும் ஸ்மோக்டு வாசனைக்காக மிதக்கும் மண் பாத்திரத்தில் தேங்காய் சிரட்டையில் தீ பற்ற வைத்து அரை ஸ்பூன் நெய் ஊற்றி மூன்று நிமிடங்களுக்கு மூடிவிடுங்கள்.
- அதன் பிறகு சிக்கன் ஹண்டி எடுத்து சாப்பிடவும். பிரியாணி, சப்பாத்தி, பரோட்டாவுடன் தொட்டு சாப்பிடுவதற்கு மிக ருசியாக இருக்கும்.
மேலும் படிங்கஆந்திரா பள்ளி பொடி செய்வது எப்படி தெரியுமா ? சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation