பாசிப்பருப்பில் இட்லி அவித்து புட்டு செஞ்சு சாப்பிடுங்க; ஆரோக்கியத்திற்கு நல்லது

பாசிப்பருப்பு புட்டு செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். பாசிப்பருப்பு புட்டு உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்ற விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
image

ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே எதோ ஒரு சத்து உள்ளது. ஒரு உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்க அதோடு சில பொருட்களை சேர்த்தால் போதுமானது. உதாரணத்திற்கு இட்லியில் 100 கலோரிகள் உள்ளது. இட்லி அரிசிக்கு பதிலாக தானியங்கள் பயன்படுத்தி இட்லி தயாரித்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும். சாம்பாரில் கேரட் உடன் நிறுத்தி விடாமல் முருங்கைக்காய், அவரைக்காய், பூசணிக்காய் இன்னும் சில காய்கறிகளைச் சேர்த்தால் ஊட்டச்சத்து மதிப்பு கூடும். அந்த வகையில் பாசிபருப்பு வைத்து ஆரோக்கியமான புட்டு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். பாசிப்பருப்பில் புரதச்சத்து மிக அதிகம். உடலில் செல் வளர்ச்சிக்கு பாசிப்பருப்பு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் செரிமானத்திற்கு உதவுகிறது.

pasiparuppu idli

பாசிப்பருப்பு புட்டு செய்ய தேவையானவை

  • பாசிப்பருப்பு
  • வெல்லம்
  • ஏலக்காய் பொடி
  • உப்பு
  • நெய்
  • முந்திரி
  • தேங்காய் துருவல்

மேலும் படிங்க கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செய்முறை; ரசத்திற்கு பதிலாக செஞ்சு ருசிங்க

பாசிப்பருப்பு புட்டு செய்ய தேவையானவை

  • 250 கிராம் பாசிப்பருப்பு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அதன் பிறகு தண்ணீரை வடித்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • இட்லி மாவு எந்த பதத்திலேயே பாசிப்பருப்பை அரைத்து எடுக்கவும்.
  • அடுத்ததாக இட்லி குக்கரில் பாசிப்பருப்பு ஊற்றி மிதமான சூட்டில் 12-15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுங்கள்.
  • இதனிடையே ஒரு கப் வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி பாகு தயாரிக்கவும்
  • வெல்லம் கரைந்து கொதித்தவுடன் வடிகட்டி விடுங்கள்.
  • பாசிப்பருப்பில் இட்லி வெந்த பிறகு சூர்யவம்சம் படத்தில் தேவயானி இட்லியை உப்புமாவாக மாற்றுவது போல பாசிப்பருப்பு இட்லி மிக்ஸியில் போட்டு உப்புமா ஆக மாற்றுங்கள்.
  • பேனில் 4 ஸ்பூன் நெய் ஊற்றி 10 கிராம் முந்திரி பருப்பு, 20 கிராம் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • ஒரு கப் வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்
  • இப்போது அரைத்த புட்டு மீது வெல்ல பாகு ஊற்றி, நெய்யில் வறுத்த முந்திரி-தேங்காய் போட்டு கொஞ்சமாக ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • ஆரோக்கியமான பாசிப்பருப்பு புட்டு ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP