குழந்தைகளின் மதிய உணவிற்கு சுவையான குடை மிளகாய் புலாவ் செய்முறை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ருசியாக ஏதாவது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதிக காரம் இல்லாத குடை மிளகாயை வைத்து ருசியான புலாவ் செய்துக் கொடுங்க
image

ஒவ்வொரு வீடுகளிலும் காலை நேரங்களில் அம்மாக்கள் பம்பரமாய் சுற்றுவார்கள். எழுந்தவுடன் அவர்களுக்கான வேலையை செய்வது மட்டுமின்றி, வீட்டில் உள்ள அனைவருக்கும் ருசியான உணவுகளை செய்ய வேண்டும் என்ற பொறுப்பு அதிகம் இருக்கும். அதிலும் பள்ளி நாட்களில் காலை உணவு, மதிய உணவு என இருவேளைகளுக்கும் என்ன சமைக்கலாம் என்ற யோசனை அவர்களை ஒருவழியாக்கி விடும். என்ன தான் சமைத்தாலும் ஏன் அம்மா? தினமும் ஒரே மாதிரி செய்துக் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வி வேற வந்துவிடும். இதற்காக என்ன சமைக்கலாம் என்ற தேடல் இருந்தால், யோசிக்காமல் மதிய உணவிற்கு குடை மிளகாயை வைத்து சுவையான புலாவ் செய்து பாருங்கள். உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

மதிய உணவிற்கு சுவையான குடை மிளகாய் புலாவ்:

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • குடைமிளகாய் - 3
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • கிராம்பு,பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
  • பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • நெய்- 3 டீஸ்பூன்

மேலும் படிக்க:கோவை, ஈரோடு ஸ்பெஷல் கலக்கலான சிந்தாமணி சிக்கன் ரெசிபி; கொங்குநாடு ஸ்டைலில்

குடை மிளகாய் புலாவ் செய்முறை:

  • குழந்தைகள் விரும்பும் புலாவ் செய்வதற்கு முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயையும் குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரம் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம், பிரிஞ்ச் இலை போன்றவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.

capsicum pulao

  • இதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாதனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். இதோடு கொத்தமல்லி, புதினா இலைகளையும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயம் சரியாக வதங்கவில்லையென்றால் கொஞ்சமாக உப்பு சேர்த்து வதக்கவும்.
  • 5 நிமிடங்களுக்குப் பிறகு வெட்டி வைத்துள்ள குடை மிளகாயையும் சேர்த்து சிறிது நேரத்திற்கு வதக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும் சுவையான குடை மிளகாய் புலாவ் ரெடி.

மேலும் படிக்க:மணக்கும் நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு மற்றும் அவியல்; சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இங்கே

சீக்கிரம் உங்களுக்கு புலாவ் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால், காய்கறிகளை வதக்கிக் கொள்ளும் போதே, ஒருபுறம் பாஸ்மதி அரிசியை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இறுதியில் லெமன், புளி சாதம் கிளறுவது போன்று செய்தால் போதும். சுவையான குடை மிளகாய் புலாவ் ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP