கோவை, ஈரோடு ஸ்பெஷல் கலக்கலான சிந்தாமணி சிக்கன் ரெசிபி; கொங்குநாடு ஸ்டைலில்

கொங்குநாடு சமையலில் ஸ்பெஷல் உணவான சிந்தாமணி சிக்கன் செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். சிந்தாமணி சிக்கன் கோவை, ஈரோடு பகுதிகளில் கிடைக்கும். இதை மிளகாய் கறி வறுவல் என்றும் அழைக்கின்றனர்.
image

வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எல்லோரும் இருப்பதால் கறி எடுக்க தவறமாட்டோம். சிக்கன் கிரேவி, சிக்கன் 65 என ஒரே மாதிரி சமைத்து வந்தால் வீட்டில் யாரும் விரும்பமாட்டார்கள். சிக்கனில் புரதம் இருப்பதால் அதை சாப்பிட வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் கோவை, ஈரோடு பகுதிகளில் பிரபலமான சிந்தாமணி சிக்கன் செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். எல்லா சிக்கன் உணவுகளும் ஒரே மாதிரியான செய்முறை தான். எனினும் பள்ளிப்பாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிந்தாமணி சிக்கனின் சுவை வேறுபடும். இந்த சிந்தாமணி சிக்கன் காரசாரமான சுவையில் கலக்கலாக இருக்கும்.

chicken chinthamani

சிந்தாமணி சிக்கன் செய்ய தேவையானவை

  • நாட்டு கோழி
  • சின்ன வெங்காயம்
  • மிளகு தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கறிவேப்பிலை
  • காய்ந்த மிளகாய்
  • சோம்பு
  • எலுமிச்சை

மேலும் படிங்கவீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே

சிந்தாமணி சிக்கன் செய்முறை

  • கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் சோம்பு போடுங்கள்.
  • இதோடு 20 சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்க்கவும். சின்ன வெங்காயத்தின் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு ஸ்பூன் சேருங்கள்.
  • பச்சை வாசனை போன பிறகு விதை நீக்கிய 10 காய்ந்த மிளகாய்களை பாதியாக உடைத்து போடுங்கள்.
  • அரை கிலோ நாட்டுக்கோழியை மஞ்சள் சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவி இதில் பயன்படுத்தலாம்.
  • சிக்கன் போட்ட பிறகு அடுப்பில் தீயின் வேகத்தை குறைத்துவிடுங்கள்.
  • கூடுதலாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்துவிடவும். சிக்கன் நன்றாக வேகட்டும்.
  • மிக்ஸ் செய்து கொண்டே இருங்கள். ஒரு முறை மட்டும் சிக்கன் மீது தண்ணீர் தெளிக்கவும்.
  • சிக்கன் 75 விழுக்காடு வெந்த பிறகு இரண்டு ஸ்பூன் மிளகு தூள் சேருங்கள். காய்ந்த மிளகாயின் காரம் இதற்கு நல்ல சுவையை தரும்.
  • இறுதியில் கொத்தமல்லி தூவி விட்டு கால் வாசி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்கள். அதற்கு மேல் சிக்கனை எதுவும் செய்யக்கூடாது. இதை அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள்.

சிந்தாமணி சிக்கன் சுவை வேற லெவலில் இருக்கும். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP