herzindagi
image

World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்

World heart day: உலக இருதய தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமான இருதயத்திற்காக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-09-29, 12:46 IST

World heart day: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஊக்குவிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் (WHF) தரப்பில் இருந்து இதனை மேற்கொள்கின்றனர்.

மேலும் படிக்க: கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது வரை; நெல்லிக்காயில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

 

சமீப காலமாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இன்றைய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை கூறலாம். ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம் ஆகும். அதனடிப்படையில், உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் குறித்து இதில் காண்போம்.

 

உப்பு மற்றும் சர்க்கரை:

 

அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இவை பல இருதய நோய்களுக்கு காரணமாக அமையக் கூடும். குறிப்பாக, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

இறைச்சி:

 

இறைச்சி வகைகளை (Red Meat) அதிகமாக உண்பது கூட இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Red meat

மேலும் படிக்க: Benefits of coriander water: தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

 

சோடா மற்றும் செயற்கை குளிர்பானம்:

 

உங்கள் இருதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சோடா மற்றும் செயற்கை குளிர்பானம் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். சோடா அருந்துபவர்களுக்கு இருதய நோய், உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சோடா கலந்த குளிர்பானங்களிலிருந்து விலகி இருப்பது உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Soda

 

அதிக எண்ணெய்யில் பொரித்த கோழி இறைச்சி:

 

அதிக எண்ணெய்யில் பொரித்த (Deep-fried) கோழிக்கறி உங்கள் உணவில் கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கிறது. இது இருதய நோய், டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே, இது போன்ற உணவு முறையை தவிர்க்க வேண்டும்.

 

வெண்ணெய்:

 

வெண்ணெய்யில் அதிக அளவில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எனவே, சிறந்த இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க வெண்ணெயை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, நீங்கள் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இது போன்ற உணவுகளை தவிர்ப்பதுடன் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் சரியான உடற்பயிற்சி இருந்தால் நம்முடைய இருதயம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலையும் சீராக பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]