herzindagi
image

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது வரை; நெல்லிக்காயில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முடி வளர்ச்சி முதல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது வரை எண்ணற்ற நன்மைகள் நெல்லிக்காயின் மூலம் நமக்கு கிடைக்கிறது. அவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
Editorial
Updated:- 2025-09-27, 10:31 IST

இயற்கையாக கிடைக்கக் கூடிய ஒவ்வொரு உணவு பொருளுக்கும் நிச்சயம் ஏதோ ஒரு மருத்துவ குணம் நிறைந்திருக்கும். ஆனால், அவை குறித்து போதுமான தகவல்கள் நமக்கு தெரியாது. அதிலும் பார்ப்பதற்கு மிக சிறியதாக இருக்கும் நெல்லிக்காயில்  எண்ணிலடங்காத பயன்கள் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

மேலும் படிக்க: Benefits of black raisins: வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 

நெல்லிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு அற்புதமான கனி. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக, இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களில் இருந்து உடலை விரைவாக மீட்க உதவுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் ஃபிளவனால்கள், நினைவாற்றலை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அதனடிப்படையில், நெல்லிக்காயில் இருக்கும் சில முக்கிய சத்துகளை பார்ப்போம்.

 

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

 

நெல்லிக்காயில் குவெர்செடின் (quercetin), காலிக் அமிலம் (gallic acid), கோரிலாகின் (corilagin) மற்றும் எலாஜிக் அமிலங்கள் (ellagic acids) போன்ற பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் உள்ளன. இவை உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கவும், செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடவும் உதவுகின்றன. இதனால், கல்லீரலின் செயல்பாடு மேம்படுகிறது.

Amla

 

 

இரத்த குளுக்கோஸ் அளவை சீராக்குகிறது:

 

சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை (fasting and postprandial blood glucose levels) குறைத்து, குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள குரோமியம் என்ற தாது உப்பு, சர்க்கரை நோய்க்கு எதிரான விளைவைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் படிக்க: Foods to reduce menstrual pain: மாதவிடாய் நேரத்தில் அதிக வலி இருக்கிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

 

 

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது:

 

நெல்லிக்காய் சாறு முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நொதியின் (enzyme) செயல்பாட்டை தடுத்து, முடி வளர்ச்சிக்கு தேவையான முடியின் வேர்கால்களின் செல்களின் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. தலைமுடி ஆரோக்கியத்திற்கும், கருமைக்கும் நெல்லிக்காய் மிகவும் நல்லது.

Gooseberry

 

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:

 

உயர் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவும். கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடும் முக்கிய புரதமான PPAR-a-வின் (Peroxisome proliferator-activated receptor alpha) அளவை நெல்லிக்காய் அதிகரிக்கிறது. இதனால், உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் (total cholesterol), LDL கொலஸ்ட்ரால், VLDL கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு (triglycerides) அளவுகள் குறைகின்றன.

 

நெல்லிக்காயை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், குறிப்பிட்ட அனைத்து நன்மைகளையும் பெற்று ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]