Benefits of black raisins: ஊறவைத்த வெந்தயம், பாதாம் போன்ற பலவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாகவும் நாம் அறிந்திருக்கிறோம். அந்த வகையில், ஊறவைத்த உலர் திராட்சைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்
உலர் திராட்சை என்றால் என்ன?
உலர் திராட்சை என்பது காய்ந்த கருப்பு திராட்சை பழங்கள் ஆகும். இவை சூரிய ஒளியில் அல்லது இயந்திரங்கள் மூலமாக உலர்த்தப்படுகின்றன. இந்த செயல்முறை திராட்சையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, சர்க்கரை சத்துகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் அவை இனிப்பு சுவையுடனும், மென்று சாப்பிடுவதற்கு ஏற்றதாகவும் மாறுகின்றன.
ஊறவைப்பதால் என்ன நடக்கிறது?
உலர் திராட்சையை ஊறவைப்பது அதன் மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதுடன், அதில் உள்ள ஊட்டச்சத்துகளையும் மேம்படுத்துகிறது. அதனடிப்படையில், சுமார் ஆறு உலர் திராட்சைகள் வரை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலர் திராட்சையின் நன்மைகள்:
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஊறவைத்த உலர் திராட்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சீரான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது.
இரும்புச் சத்தை அதிகரிக்கிறது: உலர் திராட்சை இரும்புச் சத்துக்கான சிறந்த மூலமாகும். இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இன்றியமையாதது. வெறும் வயிற்றில் இதை சாப்பிடும்போது இரும்புச் சத்து உறிஞ்சப்படுவது மேம்படுகிறது, ரத்த சோகையைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆற்றல் அளவை அதிகரிக்கிறது: ஊறவைத்த உலர் திராட்சையில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இவை உடனடி ஆற்றலை அளிக்கின்றன. எனவே, ஒரு நாளை தொடங்க இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது: இவற்றில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது: இதில் உள்ள ஓலியனோலிக் அமிலம் (oleanolic acid) பல் சிதைவை எதிர்த்து போராடுகிறது. இது பற்களை வலுப்படுத்தி, வாயை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கும்: இவை ரத்தத்தைச் சுத்திகரிப்பதாகவும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதாகவும் செயல்படுகிறது. மேலும், மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, ரத்த உறைவு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இவை உதவுகின்றன. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கருப்பை மற்றும் சினைப்பைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் பி.சி.ஓ.எஸ் எனப்படும் நீர்க்கட்டி பிரச்சனையை திறம்பட சரி செய்ய உதவுகின்றன.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation