Home remedy for cracked heels: பாத வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த எளிய வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்

Home remedy for cracked heels: பாத வெடிப்பு பிரச்சனையை வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்துவதற்கு அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
image

பாத வெடிப்பு பிரச்சனையை உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து வீட்டு வைத்திய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்று இந்தப் பதிவில் காணலாம். இது பலருக்கும் உதவிகரமாக இருக்கக் கூடும்.

பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் பாத வெடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பித்த வெடிப்பு என்றும் கூறுவார்கள். இந்த பித்த வெடிப்பு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பலரும் இணையத்தில் தேடுகின்றனர். மேலும், பல விதமான க்ரீம்களும் சந்தையில் கிடைக்கின்றன. அதற்கு முன்னதாக, பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உடலில் சூடு அதிகமாக இருக்கும் போது, மிருதுவான தசைகளில் வெடிப்பு ஏற்படும். உதாரணமாக, உதடு, உள்ளங்கை போன்ற இடங்களிலும் வெடிப்பு ஏற்படும். இதன் தாக்கத்தால் பாதங்களில் அதிகமாக வெடிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தடுக்க வேண்டுமென்றால் முதலில் உடல் சூட்டை தணிக்க வேண்டும். இதற்காக வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

அதன்படி, தினந்தோறும் தலைக்கு குளிப்பது நல்ல மாற்றமாக இருக்கும். இரவு நேரத்தில் உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தை காலை நேரத்தில் தணிப்பதற்காக நாள்தோறும் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது உடலில் இருக்கும் சூடு குறையத் தொடங்கும். அடுத்தபடியாக வாரத்திற்கு ஒரு நாளாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை கடைபிடிக்கலாம். இது நமது பாரம்பரியத்தில் முக்கிய அங்கம் வகித்தது.

இவை தவிர உணவு முறையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் பாத வெடிப்பு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். அதிகப்படியான எண்ணெய்யை நமது உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எனினும், இதனை முழுமையாக தவிர்க்க கூடாது. பல வைட்டமின்கள், கொழுப்பில் கரைந்து தான் நம் உடலை சென்றடைகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உணவு முறை மாற்றங்கள்:

எனவே, தேவையான அளவிற்கு மட்டுமே எண்ணெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் உணவுகள் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் இவற்றை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக, ஊறுகாய் போன்ற பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், எண்ணெய்யில் அதிகமாக பொறித்து எடுத்த உணவுகளையும் சாப்பிட கூடாது. இது பாத வெடிப்பு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இரவு நேர தூக்கத்தை தவிர்ப்பது பித்தத்தை அதிகரித்து பாத வெடிப்புக்கு வழிவகுக்கும். எனவே, சரியான தூக்கமும் இன்றி அமையாதது ஆகும். பாதங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் வெடிப்பு ஏற்பட்டால் பெரிய பிரச்சனை கிடையாது. இதற்கு சற்று விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் சரியாகி விடும். ஆனால், பாதம் முழுவதும் அதிக இடங்களில் வெடிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

சிலருக்கு பாதங்களில் ஏற்படும் வெடிப்பில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படும். இது பாதங்களில் மட்டும் ஏற்படக் கூடிய சொரியாசிஸ் ஆக இருக்கலாம். இது போன்ற சூழலில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சாப்பிட்டு, அவர்கள் கொடுக்கும் சிலவற்றை பாத வெடிப்பு மீது பூச வேண்டும். அதன்படி, அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை பெறலாம்.

பாத வெடிப்பை குணப்படுத்துவதில் மருதாணியின் பங்கு:

மருதாணி போடுவதை அழகுக்காக என்று பலர் கருதுகின்றனர். ஆனால், பாத வெடிப்பில் இருந்து கால்களை பாதுகாப்பதற்கும் மருதாணி போடும் வழக்கம் முன்னர் இருந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்டது. ஏனெனில், தோல்களில் இருக்கும் வெடிப்புகளை குணப்படுத்தும் ஆற்றலும், பித்தத்தை குறைக்கும் தன்மையும் மருதாணிக்கு இயற்கையாக இருந்தது.

பித்தத்தை கொடுக்கும் உணவுகளை தவிர்த்து, நல்லெண்ணெய் தேய்த்து குளித்தல், பாதங்களில் சிறிது விளக்கெண்ணெய் தடவுதல் போன்றவற்றை தொடர்ந்து மேற்கொள்ளும் போது, பாத வெடிப்பை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தலாம். எனினும், பாத வெடிப்பு அதிகமாகும் போது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று செயலாற்றுவது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP