

பாட்டி வைத்தியத்தில் ஒன்றான நீராவி எடுத்துக்கொள்வது மார்பு சளிக்கு நல்ல தீர்வாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் நொச்சி இலை, தைலம் இலை, மஞ்சல், மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கனமான துணியால் முழு உடலையும் பாத்திரத்துடன் முடி கொண்டு நீராவி எடுக்க வேண்டும். மார்பு சளியை வெளியேற்ற சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: நமது உடல் அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த 7 அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்
மார்பு சளி இருக்கும் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதால் சளியை மெல்லியதாக்கி தொண்டைப்பகுதியில் இருந்து ஆகற்ற எளிதாக்குகிறது. இஞ்சி, கற்பூரவல்லி இலை, துளசி மற்றும் புதினா போன்ற பொருட்களை கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வராலம்.
-1763034066817.jpg)
பூண்டு என்பது ஜலதோஷம், இருமல், நுரையீரல் காசநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கிறது. பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற கலவை சளி மற்றும் இரும்பலை போக்க உதவுகிறது.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டாது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு நிறைந்தவை. இதனால் சளி, இருமல் மற்றும் மார்பு சளி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு கிளாஸ் பாலுடன் மஞ்சள் பொடியை சேர்த்து குடித்து வரலாம் அல்லது கொதிக்கும் தண்ணீரில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்தி குடித்து வரலாம்.
மேலும் படிக்க: அடிக்கடி வாயுத்தொல்லையால் அவதிப்பட்டால் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]