Foods to reduce menstrual pain: மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படும். இதனை இயல்பான ஒரு நிகழ்வு என்று கடந்து விட முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் சத்தான சில வகை உணவுகளை சாப்பிடும் போது, வலி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். முதலில், அதிகப்படியான வலியும், இரத்தப் போக்கும் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவது அவசியம்.
இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். போதுமான அளவு இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். பெரும்பாலும், இரும்புச் சத்து குறைவாக இருந்தால் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அதே நேரத்தில் உணவு முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நிச்சயம் பலன் அளிக்கும். இரும்புச் சத்து உடலுக்கு தேவையான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமானால், வைட்டமின் சி சத்து இன்றி அமையாதது ஆகும். இதற்காக, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றை விட அதிக அளவிலான இரும்புச் சத்து நெல்லிக்காயில் நிறைந்திருக்கிறது.
அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்:
இதற்காக இரண்டு நெல்லிக்காய்களில் இருந்து விதைகளை நீக்கி அத்துடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து சாறு எடுத்து காலை நேரத்தில் டீ மற்றும் காபிக்கு பதிலாக குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகப்படுத்தும். இது மட்டுமின்றி இரத்த சோகையை குறைப்பதற்கு கம்பங்கூழ் குடிக்கலாம். தானிய வகைகளில் அதிக இரும்புச் சத்து இருப்பது கம்புவில் தான். கம்பங்கூழுடன் கறிவேப்பிலை சட்னி அல்லது எள் சட்னி அரைத்து சாப்பிடுவது இரும்புச் சத்தை அதிகரிக்க உதவும். இது கர்ப்பப்பையை வலுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம்
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் பெண்கள், கோழியின் ஈரலை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் பி12-ஐ நேரடியாக கொடுக்கும் ஆற்றல் கோழி ஈரலில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது உடலில் இரும்புச் சத்து சேர்வதை உறுதி செய்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடும் போது மாதவிடாயில் ஏற்படும் அதிக இரத்த போக்கை குறைக்க முடியும். கற்றாழையும் இதற்கு பெரிதும் உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இதனை காலை நேரத்தில் பல் துலக்கிய பின்னர் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதுவும் மாதவிடாய் வலி ஏற்படுவதை குறைக்கிறது. கற்றாழை கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள், அதனை லேகியமாக அல்லது சாறு எடுத்து குடிக்கலாம்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதனை காலை மற்றும் மதிய நேரத்தில் அரை ஸ்பூன் அளவிற்கு சாப்பாடுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்யும் போது ஹார்மோன்கள் சீராகி, மாதவிடாய் வலி ஏற்படுவதை தடுக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து கூடுதல் மருத்துவ பலன்களை அளிக்கிறது. இது போன்ற உணவுகளை சரியான முறையில் ஆரம்பகட்டத்தில் எடுத்துக் கொண்டால், பின்னர் ஏற்படக் கூடிய தேவையற்ற சிக்கல்களை தடுக்க முடியும்.
இவை மட்டுமின்றி உளவியல் ரீதியான சில சிக்கல்கள் மூலமாகவும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி அதிகரிக்கக் கூடும். எனவே, அவர்களுக்கு சரியான முறையில் ஓய்வு கொடுத்து, தேவையான உதவிகளை உடன் இருப்பவர்கள் செய்தால் இது போன்ற பிரச்சனைகளை குறைக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation