image

உங்கள் பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் எளிய குறிப்புகள்

உங்கள் பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் எளிய குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவற்றை தினந்தோறும் பின்பற்றுவதன் மூலம் நம் பற்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-11-30, 15:12 IST

உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது அழகான புன்னகைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மிகவும் முக்கியமானது. தினமும் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பல் தொடர்பான பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

உங்கள் பற்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அத்தியாவசியமான தினசரி பழக்கவழக்கங்கள் குறித்து இதில் காண்போம். இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, தினமும் இரண்டு முறை பல் துலக்குவது ஆகும். காலையில் எழுந்தவுடன் ஒரு முறையும், இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு முறையும் பற்பசையை பயன்படுத்தி பல் துலக்குவது அவசியம். இது பற்களில் சேரும் பாக்டீரியா மற்றும் உணவு துகள்களை அகற்ற உதவுகிறது. மென்மையான முறையில் இரண்டு நிமிடங்களுக்கு குறையாமல் பல் துலக்குவதை உறுதி செய்யுங்கள். பல் துலக்கிய பின் ஒரு நல்ல அன்டிபாக்டீரியல் மவுத்வாஷ் பயன்படுத்துவது கிருமிகளை அகற்றும்.

 

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்:

 

சாக்லேட்டுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும். இவற்றில் உள்ள சர்க்கரை, வாயில் உள்ள பாக்டீரியாவுடன் இணைந்து அமிலத்தை உருவாக்கி பற்சிதைவை ஏற்படுத்தும். இது தவிர தண்ணீர் குடிக்கும் போது வாயில் உள்ள உணவு துகள்களை அகற்ற முடியும். மேலும், இது உமிழ்நீர் உற்பத்தியை தக்கவைக்க உதவுகிறது. உமிழ்நீர் என்பது பற்களை பாதுகாக்கும் இயற்கையான கவசம் ஆகும்.

Oral health

 

மேலும் படிக்க: வீட்டிலேயே இருக்கும் அற்புத மருந்துகள்; சளி மற்றும் இருமலுக்கு தீர்வு அளிக்கும் இயற்கை வைத்திய முறை

 

சிகரெட் பிடிப்பது அல்லது புகையிலை மெல்லுவது போன்ற பழக்கங்கள் ஈறு நோய்கள், வாய் புற்றுநோய் போன்ற தீவிரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான பற்களுக்கு புகையிலையை தவிர்ப்பது அவசியம். மேலும், சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாத சூயிங்கம் மெல்லுவது உமிழ்நீர் சுரப்பை தூண்டும். இந்த உமிழ்நீர் வாயில் உருவாகும் அமிலங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள்

 

பராமரிப்பு குறிப்புகள்:

 

உங்கள் பல் துலக்கும் பிரஷ்ஷை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது அதன் முனைகள் தேய்ந்துபோகும்போதெல்லாம் மாற்றுங்கள். தேய்ந்த பிரஷ்ஷால் திறம்பட சுத்தம் செய்ய முடியாது. உங்கள் உணவில் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும், ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற நார்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Oral health

 

எந்தவொரு பெரிய பிரச்சனையும் வருவதற்கு முன் ஆரம்பத்திலேயே கண்டறிய, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொள்ளலாம். இந்த எளிய தினசரி பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் பற்களை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]