
அழகான, அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பது கடினமான வேலை அல்ல. முறையான கவனிப்பு மற்றும் சீரான பராமரிப்பு இருந்தால் இதனை எளிதாக அடைய முடியும். உங்கள் முடி நீளமாகவும், கருமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய பராமரிப்பு முறைகள் குறித்து காண்போம்.
மேலும் படிக்க: முட்டை ஹேர் மாஸ்க்: வறண்ட கூந்தலுக்கும், பொடுகு தொல்லைக்கும் ஒரு சிறந்த தீர்வு!
கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது ஒரு சிகிச்சை போன்றது. இதன் மூலம் தலைக்கு நல்ல மசாஜ் கொடுத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இதன் மூலம் முடியின் வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வை தடுக்க முடியும். உங்கள் உச்சந்தலையின் தன்மைக்கு ஏற்ற எண்ணெய்யை தேர்ந்தெடுங்கள். தேங்காய் எண்ணெய் ஆழமாக ஊடுருவி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. முடி வறட்சியாக காணப்பட்டால் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். கருமையான நிறத்தை பராமரிக்க கடுகு எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் சரியாக இருக்கும்.

எண்ணெய்யை லேசாக சூடாக்கி, உங்கள் விரல் நுனிகளை பயன்படுத்தி உச்சந்தலையில் தடவி, 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மிதமான சல்ஃபேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தி குளித்து விடலாம்.
துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி கூந்தலையும் பாதிக்கின்றன. உங்கள் முடிக்கு இரும்பு, சின்க் மற்றும் பயோட்டின் நிறைந்த ஊட்டச்சத்து தேவை. உங்கள் அன்றாட உணவில் பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் முட்டை, பன்னீர் அல்லது டோஃபு போன்ற புரத உணவுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இது வறட்சி தன்மையை தடுக்கிறது.
மேலும் படிக்க: வீட்டிலேயே மருதாணி எண்ணெய் செய்வது எப்படி? அடர்த்தியான, கருமையான கூந்தலுக்கு சூப்பர் டிப்ஸ்
அதிக இரசாயன பொருட்களை பயன்படுத்துவது உங்கள் முடியின் இயற்கையான அமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தும். உங்கள் இயற்கையான முடி அமைப்புக்கு ஏற்ற வகையில் பொருட்களை பயன்படுத்தலாம். மேலும், ஹேர் ஸ்ட்ரைட்டனர் போன்ற பொருட்கள் பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். இவை அதிக வெப்பதை ஏற்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
உங்கள் முடியின் முனைகளை தொடர்ந்து வெட்டும் போது, கூந்தல் ஆரோக்கியமாக வளர முடியும். இதனால் முடியின் முனைகளில் ஏற்படும் பிளவை குறைக்கலாம். ஒவ்வொரு 8 முதல் 10 வாரங்களுக்கும் ஒரு முறை முடி வெட்டினால் போதுமானது. இது தவிர இறுக்கமான சிகை அலங்காரங்களை தவிர்க்க வேண்டும்.

சருமத்தை பாதுகாப்பதை போன்று கூந்தலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் அல்லது தூசிகள் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் தொப்பி அணிந்து கொள்ளலாம். கற்றாழை ஜெல், இயற்கையான எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கவும். அதிக இரசாயனங்கள் இல்லாத மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்கள் கூந்தல் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]