
Children’s Day Wishes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்றைய நாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். குழந்தைகள் மீது நேரு கொண்டிருந்த அன்பு அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க: Children's day 2025 speech ideas in tamil: குழந்தைகள் தின விழாவுக்கான உரையை தயார் செய்பவரா நீங்கள்? இந்த டிப்ஸை நோட் பண்ணுங்க
நம் இந்திய நாட்டின் எதிர்காலம் என்பது குழந்தைகள் கைகளில் தான் இருக்கிறது. அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு நாம் எல்லோருமே பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த தினத்தில் நாம் குழந்தைகளிடம் வாழ்த்து பகிர்வது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். அதன்படி, இந்த குழந்தைகள் தினத்தில் குழந்தைகளிடம் பகிரக் கூடிய வாழ்த்துகள் தமிழில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குழந்தைகள் மனதில் நம்பிக்கையை மளரச் செய்வோம்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
மீண்டும் அடைய முடியுமா என்று ஒருமுறையாவது
எல்லோரையும் ஏங்க வைப்பது தான் குழந்தைப்பருவம்;
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
மேலும் படிக்க: Gandhi jayanti: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சுப் போட்டிக்கான எளிய குறிப்புகள்
அனைத்து குழந்தை செல்வங்களும்
நாட்டின் வருங்கால தூண்கள்;
இந்தியாவின் வருங்கால தூண்களுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
எல்லோருடைய வாழ்க்கையின்
இனிமையான காலம் என்றால்
அது குழந்தைப்பருவமாகும்;
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

இந்த உலகில் மிகவும் விலை
மதிப்பற்ற விஷயம் ஒரு
குழந்தையின் முகத்தில் வரும் புன்னகை தான்;
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
குழந்தைகளுக்கு ஒரு சிறந்த
வாழ்க்கையை உறுதி செய்வதன்
மூலம் அவர்களின் குழந்தைப்பருவத்தை
மறக்க முடியாததாக மாற்றுவோம்;
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்பர்,
குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம்;
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும்
அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]