herzindagi
image

Children's day 2025 speech ideas in tamil: குழந்தைகள் தின விழாவுக்கான உரையை தயார் செய்பவரா நீங்கள்? இந்த டிப்ஸை நோட் பண்ணுங்க

Children's day 2025 speech ideas in tamil: குழந்தைகள் தின விழாவுக்கான உரையை தயார் செய்வதற்கான எளிய குறிப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் என பலருக்கு உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-12, 14:08 IST

Children's day 2025 speech ideas in tamil: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளாகும். குழந்தைகளிடம், நேரு மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், அவரது பிறந்தநாள் குழந்தைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.

மேலும் படிக்க: Gandhi jayanti: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சுப் போட்டிக்கான எளிய குறிப்புகள்

 

இந்தக் கொண்டாட்டம் குழந்தைகளின் உணர்வை வலியுறுத்துவதோடு, அவர்களின் உரிமைகள், கல்வி மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

 

குழந்தைகள் தின விழாக்களில், நம் இளைய உள்ளங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களது மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்கவும் உதவும் தனித்துவமான சில உரைகளை தயார் செய்வதற்கான குறிப்புகள் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பலருக்கும் உதவியாக இருக்கும்.

 

குழந்தைகள் தின விழாவுக்கான உரையை தொடங்கும் முறை:

 

உங்கள் குழந்தைகள் தின உரையை, ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றை கூறி தொடங்கலாம். குழந்தைகள் மீதான அவரது அளவற்ற பாசம், கல்வி, சமத்துவம் போன்றவற்றில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை குறித்து பேசலாம். நேருவின் கனவான ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்க, குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எப்படி உதவ முடியும் என்ற கேள்வியுடன் உரையை முடிக்கலாம். இது மாணவர்களை சிந்திக்க வைக்கும்.

Children's day 2025

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்

 

உங்கள் உரையை தீவிரப்படுத்தும் முறை:

 

உங்களுடைய உரை மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தின் மதிப்பை எடுத்துரைக்க ஏற்றதாக இருக்க வேண்டும். உண்மை அல்லது கருணை குறித்த சிறுகதை அல்லது பழமொழியுடன் உரையை தொடங்கலாம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதன் அவசியம், விடாமுயற்சி போன்ற விஷயங்களை குழந்தைகள் மனதில் ஆழமாக விதைப்பதை போன்று உரை அமைய வேண்டும். பள்ளி மற்றும் சமுதாயத்தை மேம்படுத்த, அனைவரும் தினமும் ஒரு நேர்மறையான நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாணவர்களை வலியுறுத்துங்கள்.

Happy Children's day

 

குழந்தைகளின் கல்வி சார்ந்த உரிமைகள்:

 

ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் கல்வி எவ்வாறு அடித்தளமாக அமைகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். கல்வி என்பது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல; அது சிந்திக்கும் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் கனிவான தனிநபர்களாக வளர்வது போன்றவற்றை உள்ளடக்கியது என்று எடுத்துரைக்கலாம். கற்றல் ஒரு மகிழ்ச்சியான பயணம் என்பதை உணர்த்துங்கள்.

 

இது மட்டுமின்றி தலைமை பண்பு என்றால் அதிகாரம் அல்ல, அது ஒரு பொறுப்புணர்வு என்பதை மாணவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். தலைமைத்துவம் என்பது அதிகாரம் கொண்டிருப்பது அல்ல, மாறாக நன்மைக்காக ஒருவரின் குரலை பயன்படுத்துவது என்று கூறலாம்.

 

நேர்மைக்காக பாடுபடும், இயற்கையை காப்பாற்றும், அன்பையும், நேர்மறை ஆற்றலை பரப்பும் அனைவரும் இந்த நாட்டை வளப்படுத்த முடியும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும். இது போன்ற அனைத்தையும் மாணவர்களுக்கான உரையில் குறிப்பிடுவதன் மூலம் அவர்களை உத்வேகப்படுத்த முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]