herzindagi
sagging breast

Sagging Breasts: 7 நாட்களில் மார்பக தளர்ச்சியை குணப்படுத்தும் கற்றாழை... எப்படி தெரியுமா?

இயற்கையான பொருட்களை பயன்படுத்தி பெண்கள் மார்பகங்களை அழகாக வைத்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்
Editorial
Updated:- 2025-08-04, 08:57 IST

ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகாக வைத்திருக்க அதிக முயற்சிகள் செய்கிறார்கள். ஆம், பெண்கள் தங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஏனெனில் பெண்களின் உடலின் ஒவ்வொரு உறுப்பும் அவர்களின் அழகை அதிகரிக்க உதவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மார்பகம் தளர்வது பெண்களின் அழகைக் கொடுக்கிறது. பெண்கள் மார்பகத்தை இறுக்க பல ரசாயன பொருட்களை எடுத்து கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படுத்தும். அதனால் பெண்கள் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்கள் மார்பகத்தின் தளர்ச்சியை எளிதாக அகற்றலாம். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால் இந்த குறிப்புகள் உங்கள் வீட்டிலேயே எளிதாகக் செய்து பார்க்கலாம். மேலும் அவைகள் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

தளர்வான மார்பகங்களுக்கான காரணம் என்ன?

தளர்வான மார்பகங்களுக்கு முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த பிரச்சனை பொதுவானது, இது தவிர பிராவை அணிவது, அதாவது உங்கள் அளவை விட சிறியது அல்லது பெரியதை அணிவது, அது மார்பகத்தின் வடிவத்தை கெடுத்துவிடும். பெண்களின் தளர்வான மார்பகங்களால் முதுகுவலி, சோர்வுகள் போன்ற உடல்நல பிரச்சனைகள் வரும். அதனால்தான் மார்பகம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருப்பது அவசியம்.

 

இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு வலதுபக்க மார்பு ஏன் அடிக்கடி வலிக்கிறது தெரியுமா?

 

அலோ வேரா

 

aloe vera

உங்களுக்கு தெரியும் அலோ வேரா பல நூற்றாண்டுகளாக தளர்வான தோலை இறுக்க பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை உங்கள் மார்பகத்தின் தளர்வை நீக்க உதவும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கற்றாழை ஜெல்லை 15-20 நிமிடங்கள் மார்பகத்தில் வைத்து மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு 10 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்யலாம். சில நாட்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

முட்டை

ஒரு வெள்ளரிக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு ஒரு முட்டையை கலந்து பேஸ்ட் செய்யவும். பின் இந்த பேஸ்ட்டை மார்பகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடவும் அதன் பின் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தினால் மார்பகத்தின் தளர்வு நீங்கி இறுக்கமாக மாறும்.

கேரட்

கேரட் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உங்கள் மார்பகத்தின் தளர்வை நீக்க உதவுகிறது. இதற்கு கேரட்டை அரைத்து பேஸ்ட் செய்து அதில் தேன், வெங்காய சாறு மற்றும் சிறிது குளிர்ந்த நீர் சேர்க்கவும். பிறகு ஃப்ரீசரில் வைத்து ஐஸ் போல் உறைய வைக்கவும். கேரட் ஐஸ் க்யூபை மார்பில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்த பின் தேன் கொண்டு மீண்டும் மசாஜ் செய்யவும். மீண்டும் கேரட் ஐஸ் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மார்பகம் இறுக்கமாக இருக்கும்.

மாதுளை

 

pomegranates seed oil

மாதுளை விதை எண்ணெய் மார்பக தளர்ச்சியை நீக்க உதவுகிறது. இதற்கு தினமும் மாதுளை எண்ணெய் கொண்டு மார்பக மசாஜ் செய்வது பலன் தரும். இது தவிர மாதுளம் பழத்தோலை அரைத்து இரவில் மார்பில் வைத்துவிட்டு காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதை சில வாரங்கள் பயன்படுத்தினால் மார்பகத்தின் தளர்வு நீங்கும்.

ஆலிவ் எண்ணெய்

 

olive oil

ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் என்று கருதப்படுகிறது. இந்த எண்ணெய் மார்பகத்தை இறுக்கமாக்க உதவுகிறது. ஒரு கப்பில் ஆலவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதில் சிறிது ஆரஞ்சு தோல், மஞ்சள் தூள் மற்றும் புதினா இலைகளை போட்டு மூடி வைத்து 15 நாட்கள் வெயிலில் வைக்கவும். இந்த எண்ணெயை 15 நாட்கள் கழித்து தினமும் மார்பகத்தில் தடவி மசாஜ் செய்தால் தளர்வு நீங்கும்.

வெந்தயம் மற்றும் தயிர்

2 டீஸ்பூன் வெந்தய விதைகள், 5 மில்லி வைட்டமின் ஈ எண்ணெய், அரை கப் தயிர் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, இவற்றை நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்து பின்னர் மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரில் கழுவவும். வாரம் ஒருமுறை இந்த டிப்ஸ்களை செய்து வந்தால், மார்பகத்தின் தளர்வு நீங்கும்

 

இந்த பதிவும் உதவலாம்: கீழ் முதுகு வலியை சரிசெய்ய இந்த யோகாக்கள் உதவும்

 

உங்கள் மார்பகத்திலும் தளர்வு இருந்தால், இந்த உதவிக்குறிப்புகளின் உதவியுடன் அதை எளிதாக அகற்றலாம்.

இந்த தகவலை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம். உடல்நலம் தொடர்பான தகவல்களைப் பெற herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]