herzindagi
yoga for womens health

Yoga for Lower Back Pain : கீழ் முதுகு வலியை சரிசெய்ய இந்த யோகாக்கள் உதவும்

பெண்களின் கீழ் முதுகு வலியை சரிசெய்ய யோகாசனங்கள் உதவுகின்றன. அதுக் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-05-29, 09:43 IST

பெண்களால் அதிகப்படியான முதுகு வலியை தாங்க முடியாது. அவர்கள் அதை சரிசெய்ய பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள். அந்த வகையில், இயற்கையாகவே பெண்களின் கீழ் முதுகு வலியை சரிசெய்ய யோகாசனங்கள் உதவுகின்றன. அதுக் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

நௌகாசனம்

இந்த ஆசனம் ’படகு யோகா போஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதை செய்வதன் மூலம், உடலை நாள் முழுவதும் சூடாக வைத்துக்கொள்ளலாம். நௌகாசனம் உடல் சோம்பலை நீக்கவும் உதவுகிறது.

செய்யும் முறை

  • முதுகால் படுத்து இரு கைகள் மற்றும் கால்களை நேராக வைக்கவும்.
  • இப்போது உடலை வளைக்காமல், எதையும் பிடித்துக் கொள்ளாமல் இரு கால்களை மட்டும் காற்றில் மேலே தூக்கவும்.
  • பின்பு இடுப்பின் மேல் பகுதியை உயர்த்தி, கீழ் இடுப்பு மட்டும் தரையில் படும்படி அமரவும்.

வசிஷ்டாசனம்

இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இதை செய்வதனால் உடல் சூடும் அதிகரிக்கும். இந்த ஆசனம் ’பக்கவாட்டு பலகை போஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

yoga for good health

செய்யும் முறை

  • முதலில் ஒரு கையை மட்டும் ஊனி படுக்கவும்.
  • இப்போது கையின் கீழ் பகுதியை நேராக்கி, முழு உடலையும் கையில் தாங்கி பிடிக்கவும்.
  • அடுத்து, மேற்புறத்தில் இருக்கு கால் மற்றும் கைகளை காற்றில் லேசாக உயர்த்தி பிடிக்கவும்.

சவாசனம்

இது மிகவும் எளிதான யோகாசனம் ஆகும். இதை செய்ய நீங்கள் அதிக சிரமப்பட வேண்டியதில்லை. இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம் உடலை சூடாக வைத்துக் கொள்ளலாம்.

செய்யும் முறை

  • தரையில் பாய் விரித்து முதுகை அதில் சாய்த்து அண்ணாந்து படுக்கவும்.
  • பின்னர், கண்களை மூடிக்கொண்டு கவனம் செலுத்தவும்.
  • இந்த நேரத்தில் உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வரவும்.
  • இந்த ஆசனத்தை 15 நிமிடத்திற்கு செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்:ஒற்றை தலைவலியை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சிரசாசனம்

  • இதை சுவருக்கு அருகில் நின்றப்படி எளிதாக செய்யலாம்.
  • முதலில், முழங்கைகளுக்கு இடையில் தலையை வைக்கவும்.
  • உடலின் கீழ் பகுதியை மெதுவாக உயர்த்தவும்.
  • பின்பு உடலை சுவரில் சாய்த்து அப்படியே நிறுத்தவும்.
  • இந்த ஆசனத்தை 5 நிமிடத்திற்கு செய்யவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]