பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து முதல் நார்ச்சத்து வரை ஏராளமான மருத்துவ பயன்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த பேரீச்சம் பழம், செரிமான மண்டல ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில், பேரீச்சம் பழத்தின் நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைப்படுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை
ஆயுர்வேத மருத்துவத்தில், பேரீச்சம் பழம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேற்கத்திய ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளின்படி, தினமும் 2 முதல் 3 பேரீச்சம் பழங்களை உட்கொள்ளும் போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி: பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் ஏற்படும் அழற்சியைக் (inflammation) குறைக்க உதவுகின்றன. அத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இதில் உள்ள இயற்கை கலவைகள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கக்கூடும்.
சரும ஆரோக்கியம்: பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் முன்கூட்டிய வயதான தோற்றத்தை தடுத்து, சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்க உதவுகின்றன.
நோய்களை தடுக்கும் ஆற்றல்: இது, ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடுகள் மூலம் நோய்களைத் தடுக்கிறது. இதில் கௌமாரிக், ஃபெருலிக், சினாபிக் அமிலங்கள் மற்றும் பல ஃப்ளேவோனாய்டு கலவைகள் உள்ளன.
மேலும் படிக்க: முகச்சுருக்கங்களை தடுத்து 50 வயதிலும் இளமையாக இருக்க இந்த 10 உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
பேரீச்சம் பழத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். இது தவிர ஸ்மூத்தி தயாரித்து அதில் 2-3 பேரீச்சம் பழங்களை சேர்த்து அருந்தலாம். சாலட் அல்லது தானியங்களுடன் பேரீச்சம் பழத்தை சேர்ப்பதன் மூலம் சுவையையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கலாம்.
நம் உடலுக்கு இவ்வளவு நன்மை அளிக்கும் பேரீச்சம் பழத்தை ஏதேனும் ஒரு வகையில் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆற்றலை அதிகரிக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, நம் உணவு பழக்கத்தில் பேரீச்சம் பழத்திற்கு என தனி இடத்தை கொடுக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]