herzindagi
headache tips tamil

Migraine Headache Home Remedies : ஒற்றை தலைவலியை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அடிக்கடி ஏற்படும்  ஒற்றை தலைவலியை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்தும்,  ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதையும் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-05-22, 09:37 IST

ஒற்றை தலைவலி உலக வியாதியாக கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி தொடங்கி, பின் தலைவலி, தலைபாரம் என தலைவலியில் பலவகையுண்டு. இதை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தலைவலியை குறைக்க யோகா பெரிதும் உதவுகிறது. நீண்டகாலமாக தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் 20 நிமிடம் யோகா செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும். இதன் மூலம் தலைவலியை அடியோடு சரிசெய்து விடலாம். தலைவலி வந்த உடன் மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் அதற்கு பதில் இஞ்சி கசாயம், சுக்கு காபி போன்ற மூலிகளை வைத்தியத்தை பின்பற்றலாம். காலம் காலமாக இருந்து வரும் இந்த பாட்டி வைத்தியம் தலைவலிக்கி மிகப் பெரிய நிவாரணம் அளிக்கிறது.

வெந்நீர்

தலைவலியை சரிசெய்ய வெந்நீர் பெரிதும் உதவுகிறது. திடீரென்று தலைவலி வந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் வைத்து குடிக்கலாம். இப்படி செய்யும் போது தலைவலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக காபி, டீ போன்றவற்றை பருகாமல் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்:தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

headache pain

போதுமான தூக்கம்

தலைவலி ஏற்பட முக்கியமான காரணம் போதுமான தூக்கம் இல்லாமல் போவது. இதை சரிசெய்ய ஓய்வு நேரத்தில் சிறிது நேரம் படுத்து தூங்கவும். அதே போல் இரவு நேரத்தில் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்தால் தலைவலி பிரச்சனை குறையும்.

வைட்டமின் மாத்திரைகள்

பலநேரங்களில் உடலில் ஏற்படும் வைட்டமின் குறைப்பாட்டால் தலைவலி ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வைட்டமின் B2, B12 நிறைந்த மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் தலைவலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நல்லதா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]