herzindagi
watermelon fruit tamil

Watermelon Benefits : தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தர்பூசணி பழத்தை உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதும் உடலுக்கு ஏன் நல்லது? என்பதை பார்க்கலாம். 
Editorial
Updated:- 2023-05-05, 09:44 IST

இது மிக மிக குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகும். இதில் 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கோடை காலத்தில் மட்டுமில்லை எல்லா நேரத்திலும் தர்பூசணியை தாரளமாக எடுத்து கொள்லலாம். இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதுக் குறித்து விரிவாக பார்ப்போம்.

தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச் சத்து, புரதச்சத்து அதிமாக இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்க உது உதவுகிறது. மேலும் தர்ப்பூசணியில் இருக்கும் பொட்டாசிய சத்து இதய ஆரோக்கியத்தை உறுதி செய்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

தர்பூசணி தரும் நன்மைகள்

  • தர்பூசணியில் இருக்கும் லைக்கோபீன் புற்றுநோய வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை, மார்பக புற்றுநோயை தடுக்க தர்பூசணி பெரிதும் உதவுகிறது. இதை பெண்கள் கட்டாயம் உட்கொள்ளலாம்.
  • இதில் இருக்கும் தனிமங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. அதே போல் இதயத்தில் தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் தர்பூசணி பழங்கள் உதவுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் C உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.

benefits of watermelon

  • முக அழகு மற்றும் தோல்களை பளீச்சென்று மாற்ற தர்பூசணி பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் , முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தருக்கவும் தர்பூசணியை தினமும் உட்கொள்ளலாம்.
  • ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தர்பூசணி பழத்த்தை எடுத்து கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டனின் C ஆஸ்துமாவை குறைப்பாட்டை சரிசெய்கிறது. இதில் நார்ச்சத்து மற்றும் நீர் அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் தர்பூசணி உள்ளது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]