மார்பக வலிக்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் மார்பக வலியை ஏற்படுத்துகின்றன. உங்கள் மாதவிடாய்க்கு முன்பு மார்பில் வலி ஏற்படுவது பொதுவான ஒன்று. ஒன்று அல்லது இரண்டு மார்பகங்களிலும் வலி இருக்கும் சில பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு பயப்படலாம். இருப்பினும், மார்பக வலி புற்றுநோயின் பொதுவான அறிகுறி அல்ல.
இந்த பதிவும் உதவலாம்: கீழ் முதுகு வலியை சரிசெய்ய இந்த யோகாக்கள் உதவும்
குழந்தை பிறந்த உடனேயே, ஒரு பெண்ணின் மார்பகங்கள் பால் வீக்கமடையக்கூடும். இது மிகவும் வேதனையாக இருக்கும். உங்களின் மார்பக பகுதி சிவந்திருந்தால் மருத்துவரை அணுகவும். ஏனெனில் இது தொற்று அல்லது பிற தீவிர மார்பகப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.தாய்ப்பால் கொடுப்பதால் கூட வலதுது பக்கம்மார்பக வலி ஏற்படலாம்.
ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள் மார்பக வலிக்கு ஒரு பொதுவான காரணமாகும். ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக திசுக்களில் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் உள்ளன, அவை உங்கள் மாதவிடாய் காலத்திற்கு சற்று முன்பு மென்மையாக இருக்கும்.சில மருந்துகள் மார்பக வலியையும் ஏற்படுத்தலாம்.
நாள் பட்ட மார்பக வலி என்றால் எந்த தயக்கமும் இன்றி மருத்துவரை பார்ப்பது தான் சிறந்த தீர்வு.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]