கெட்ட கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனையைப் போக்க உதவும் பச்சைப்பயிறு

இந்திய மக்கள் கண்டிப்பாக பச்சைப்பயறு சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் அதை சாப்பிடுவது கொழுப்பிலிருந்து இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
image

இந்திய சமையல் பகுதியில் பச்சைப்பயிறு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பல வகையான பருப்பு வகைகள் சமைக்கப்பட்டாலும், பச்சைப்ப்யிறுக்கு ஒரு தனி பெயர் இருக்கிறது. இது அனைத்து பருப்பு வகைகளிலும் சிறந்தது என்று கருதப்படுகிறது, இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இது பல பிரச்சினைகளையும் குணப்படுத்தும். பச்சைப் பருப்பை சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

பச்சைப்பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பச்சைப்பயிறு அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். உண்மையில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இது குடலில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. குடல் இயக்கம் மூலம் கொழுப்பை வெளியேற்றுகிறது, இருப்பினும் இதை மருந்திற்கு பதிலாக சிகிச்சையாக எடுக்க முடியாது. இதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் நீங்கள் பயனடையலாம்.

உங்கள் கொழுப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது, உங்கள் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். இது தவிர, பச்சைப்பயிறில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்தப் பருப்பில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ள காரணத்தால் உட்கொள்ளும்போது, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், மேலும் நீங்கள் மீண்டும் மீண்டும் உணவுக்காக ஏங்குவதில்லை. இந்த வழியில், நீங்கள் எடையைக் குறைக்கலாம்.

cholesterol

இந்தப் பருப்பின் கிளைசெமிக் குறியீட்டும் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இதை உட்கொள்ள வேண்டும். இது தசை வளர்ச்சிக்கு உதவும் புரதத்தின் சிறந்த மூலமாகும்.

பச்சைப்பயிறு உட்கொள்ளும் முறை

  • வேகவைத்த பச்சைப் பயறு சாப்பிடலாம்.
  • பச்சைப்பயிறை முளைகட்டி காலையில் எடுத்துக்கொள்ளலாம்.
  • பச்சைப்பயிறு சூப் செய்து மாலை வேலையில் குடிக்கலாம்.
  • சாலட்டில் சேர்த்து சாப்பிடுங்கள்.
  • பச்சைப்பயிரௌ கிச்சடி போல் சமைத்து சாப்பிடலாம்.
  • பச்சைப்பயிறை அரைத்து தோசை மாவில் கலந்து, தோசை செய்து சாப்பிலாம்.
blood pressure

மேலும் படிக்க: மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையால் சிரமப்படுகிறீர்கள் என்றால் இந்த அற்புத பழம் உங்களுக்கு உதவும்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP