herzindagi
Chamomile flowers tea card

Insomnia Remedy Tea: தூக்கமின்மை பிரச்சனையை குணப்படும் ருசியான டீ

பகல் முழுவதும் களைப்பாக இருந்தாலும் இரவில் தூங்க முடியாவிட்டால் அல்லது தூங்கிய உடனேயே கண்களைத் திறந்தால் இந்த டீ நல்ல தீர்வாக இருக்கும்
Editorial
Updated:- 2023-09-10, 23:44 IST

நீங்களும் மணிக்கணக்கில் படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கிறீர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்கள் என்றால். இதற்கு சிகிச்சை இருந்தாலும் நீங்கள் மாதக்கணக்கில் மருந்து சாப்பிட வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் பிரச்சனையை எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இந்த தகவலை உணவியல் நிபுணர் சிம்ரன் பாசின் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். 

 

இந்த பதிவும் உதவலாம்:  40 வயதுக்கு மேல் பெண்களுக்கு தோன்றும் மாரடைப்பின் அறிகுறிகள்

தூக்கமின்மையை போக்க கெமோமில் டீ குடிக்கவும் 

Chamomile flowers tea site

தூக்கமின்மை இருந்தால் கெமோமில் தேநீர் குடிக்கலாம். கெமோமில் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவில் காணலாம். இது மூலிகை தேநீர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளாவனாய்டு போன்ற சத்துக்கள் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கெமோமில் டீயில் அபிஜெனின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளதால் தூக்கத்தைத் தூண்டும். மனதை அமைதிப்படுத்துகிறது, கவலை மற்றும் பதட்டத்தை நீக்குகிறது.

தூக்கமின்மையை போக்கும் தேநீர் தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன், கெமோமில் பூக்களை சேர்க்கவும்.
  • வேண்டுமென்றால் அதில் ஏலக்காய் விதையையும் சேர்க்கலாம்.
  • 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இப்போது கேஸை அணைத்துவிட்டு பாத்திரத்தை மூடி சிறிது ஆறவிடவும்.
  • பின் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தேரீரை குடிக்கவும்.
  • இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு முன் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம்.

கெமோமில் தேநீரின் மற்ற நன்மைகள்

Chamomile flowers tea site

  • செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
  • எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
  • ஆஸ்டியோபோரோசிஸில் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:   செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு நட்ஸ்களை ஊறவைத்து இப்படி சாப்பிடுங்கள்!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]