
இன்றைய சூழலில் பலருக்கு இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை. மன அழுத்தம், பணியின் தன்மை என்று பல காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும், சில வகையான சத்து குறைபாடு இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். அவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Sardine fish benefits: கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; மத்தி மீனின் நன்மைகள்
மாங்கனீசு, இரும்புச் சத்து போன்று மெக்னீசியமும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். சீரான உணவை எடுத்துக் கொள்ளும் போது, இந்த ஊட்டச்சத்தையும் நமது உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியம். இது, இருதய ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. கூடுதலாக, நிம்மதியான உறக்கத்தை அளித்து மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மெக்னீசியம் சத்து நிறைந்த உணவுகளை தெரிந்துகொள்வது, நமது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். மெக்னீசியம் குறைபாடு இருந்தால் அது பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.
மெக்னீசியம் நிறைந்த கீரை வகைகள், மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோலைக் கட்டுப்படுத்த உதவும் நரம்புக் கடத்திகளை ஒழுங்குபடுத்துகிறது. இதை சாலட்களாக சாப்பிடலாம். மேலும், சிறிது எண்ணெய் அல்லது நெய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். மதிய உணவில் கீரை சேர்த்து செய்த கிச்சடி கூட ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

நமது உணவில், பீன்ஸ், பயிறு வகைகள், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்ப்பது மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். மேலும், நரம்புக் கடத்திகளை உருவாக்குவதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை குறைக்க முடியும். இவற்றை சூப், குழம்பு அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். மேலும், பலவிதமான கறிகளாக கூட சமைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
பாதாம், முந்திரி மற்றும் பூசணி விதைகள் மெக்னீசியத்தின் சிறந்த மூலப்பொருட்களாகும். ஆரோக்கியத்தை பாதிக்காமல் சுவையை அதிகரிக்க இவற்றை ஸ்மூத்திகள், தயிர் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். மேலும், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளும் இந்த அத்தியாவசிய கனிமத்தை கணிசமான அளவில் வழங்குகின்றன.

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, தானியங்கள், ஓட்ஸ் மற்றும் முழு கோதுமையை உட்கொள்ளலாம். இந்த தானியங்கள் மனநிலை ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதோடு, செரோடோனின் உற்பத்திக்கும் உதவுகின்றன. இது அமைதியான மற்றும் சீரான மனநிலைக்கு வழிவகுக்கிறது.
இந்தப் பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இதை ஒரு சிற்றுண்டியாகவோ, ஸ்மூத்தியாகவோ, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]