உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்

ஒவ்வொரு மனிதர்களிடம் உடலிலும் இயல்பை விட கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும் போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
image

இன்றைக்கு இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை சந்திக்கும் உடல் நல பிரச்சனைகளில் முக்கியமானது இதய நோய். நன்றாக இருப்பது போன்று தெரிந்திருந்தாலும் திடீரென ஏற்படக்கூடிய மாரடைப்பு நொடியின் மரணத்தை சந்திக்க வைக்கிறது. இதய நோய்க்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாக உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேரும் போது தமனிகளின் சுவர்களில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டமைக்கிறது. இவற்றை முறையாக கண்டுக்கொள்ளவில்லையெனில் இந்த இரத்த உறைவானது இதயம் அல்லது மூளையில் உள்ள தமனியைத் தடுத்து மாரடைப்பு அல்லது பக்க வாத நோய்க்கு வழிவக்கும். எனவே தான் எப்போதும் அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பார்கள். இன்றைக்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவும் உணவுகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவும் உணவுகள்:

முட்டை:

உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான உணவுகளின் பட்டியலில் முட்டைக்கென தனி இடம் உண்டு. இதில் உள்ள வைட்டமின்கள், புரோட்டீன்கள் உடலுக்கு வலுச்சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால் இவற்றை உட்கொள்ளும் போது அதிக கொழுப்புகள் உடலில் சேர்ந்து கேடு விளைவிக்கும் என்பார்கள். இவை முற்றிலும் தவறான கருத்து. முட்டையில் குறைந்த அளவிலான கொழுப்புகள் தான் உள்ளது. இவை கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்க உதவும். இருந்தப்போதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டும் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ் வகைகள்:

நொறுக்குத் தீனிகள் அதிகளவு சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகள் அப்படியே தேங்கி நிற்கும் என்பார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் நட்ஸ்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர் திராட்டை போன்ற நட்ஸ் வகைகளில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை உடலில் சேரக்கூடிய கொழுப்புகளைக் குறைக்க உதவும்.

வெங்காயம்:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது வெங்காயம். அதே போன்று தான் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கவும் உதவுகிறது. ஆம் இதில் உள்ள பிளேவனாய்டு நமது உடலில் ரத்தக்குழாய்களில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க:உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவங்க; காலையில் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்

கீரை வகைகள்:

உடலில் சேரக்கூடிய கொழுப்புகளைக் கரைக்க உதவும் முக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது கீரைகள். அனைத்துக் கீரைகளிலும் வைட்டமின்கள், புரோட்டீன்கள் அதிகம் இருந்தாலும் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்க பசலைக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதோடு மட்டுமின்றி புடலங்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதையும் தடுக்க உதவியாக இருக்கும்.

Image credit - Freepi

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP