herzindagi
healthy food main ()

Skin Healthy Food: சரும ஆரோக்கியத்தை பராமரிக்க இதோ 10 வகையான சூப்பர்ஃபுட்!!

சரும ஆரோக்கியத்திற்கு உணவுமுறையில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் பொருட்களை உண்ண வேண்டும்.
Editorial
Updated:- 2023-08-01, 17:42 IST

களங்கமற்ற மற்றும் ஒளிரும் சருமம் ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாகும். நாம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அதன் விளைவு சருமத்தில் தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் உணவு முறையும் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் சரும பளபளப்பு கிட்டாது. சில உணவுகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அந்த உணவுகளை நாம் சேர்த்துக் கொள்வதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த சூப்பர்ஃபுட்கள் குறித்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் தெரிவித்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலியின் அபாயத்தை குறைக்க சிறந்த வழி!!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுக்ள்

 

  • சருமத்தை ஆரோக்கியமாகவும், களங்கமற்றதாகவும் வைத்திருக்க கற்றாழை சாறுடன் நாளைத் தொடங்குங்கள். கற்றாழை சாறு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தி பிரகாசமாக்குகிறது.

 

  • லிச்சி பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது. லிச்சியை சிற்றுண்டியாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

 

  • சரும ஆரோக்கியத்திற்கு மாதுளை, தேங்காய் தண்ணீர் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து ஸ்மூத்தி செய்யது, அதனுடன் சியா விதைகளை அலங்கரித்து குடிக்கவும். சருமம் நீரேற்றமாக இருக்கும்.

 

  • மாலையில் பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் சாறு குடித்தால் சருமத்திற்கு இழுவை மற்றும் இறுக்கத்தை தருகிறது.

 beatroot juice for superfood

  • சரும ஆரோக்கியத்திற்கு பிளம்ஸ் பழங்களை சாப்பிடுங்கள். இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கிறது.

 

  • தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள். இதனால் சருமம் மிருதுவாக இருக்கும். உங்கள் சருமம் மந்தமாக இருந்தால் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

 

  • தினமும் காலையில் ஊறவைத்த வால்நட் சாப்பிடுங்கள். அது சரும அழற்சியைக் குறைத்து, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.

 wallnut for super food

  • கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக காணப்படுவதால் சருமத்தில் இருக்கும் நச்சு தன்மையை நீக்க உதவுகிறது.

 

  • சரும நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கோதுமை புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். 

 

  • சக்கரவள்ளி கிழங்கு சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருவதோடு, சருமத்தின் வயதைக் குறைக்கும்.

 இந்த பதிவும் உதவலாம்: தினமும் 20 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் போதும்.. இத்தனை பிரச்சனையும் தீருமாம்!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]