
இன்றைய சூழலில் சரும பராமரிப்பு குறித்த தெளிவு பலருக்கு இருக்கிறது. குறிப்பாக, சரும ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஒன்றிணைத்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது அனைத்து வயதினருக்கும் பொதுவானது.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கொத்தமல்லி; இப்படி ட்ரை பண்ணுங்க
அழகான, ஆரோக்கியமான சருமத்திற்கு இரசாயன பொருட்கள் நிறைந்த கிரீம்கள் மட்டும் தீர்வல்ல. நமது சமையலறையில் இருக்கும் சில எளிமையான பொருட்களே சிறந்த பலன்களை தரும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இயற்கை அழகை பெற உதவும் சில முக்கியமான பொருட்கள் மற்றும் அதன் நன்மைகளை இதில் காண்போம். இவற்றை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இயற்கையான சரும பொலிவை பெற முடியும்.
இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகப்பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
மஞ்சள் ஒரு சிறந்த இயற்கை அழகுப் பொருள். இது சருமத்திற்கு பொலிவை தருவதோடு, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைத்து நிறத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் ஈ நிறைந்த சீரகம், சருமத்தை பாதுகாத்து, வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், பளபளப்பையும் கொடுக்கும்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
ஜாதிக்காய் என்பது ஒரு சிறந்த இயற்கை கிருமிநாசினி. இது சருமத்தில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை தடுத்து சுத்தமான சருமத்தை பெற உதவுகிறது.
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளை குறைக்க இஞ்சி உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இது சருமத்தை சீராக்கி, புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
துளசி ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மூலிகை. இது சருமத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் தடிப்புகளை எதிர்த்து போராட உதவுகிறது. துளசியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். அந்த வகையில் இயற்கையான இது போன்ற பொருட்களை பயன்படுத்தி நமது சருமத்தை எளிதாக பாதுகாக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]