herzindagi
image

கூந்தல் கருகருவென அடர்த்தியான வளர வேண்டுமா? பீர்க்கங்காயை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

அடர்த்தியாகவும், நீளமாகவும் உள்ள கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவற்றிற்கு விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நம்முடைய சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் போதும்.
Editorial
Updated:- 2025-11-04, 01:17 IST

பெண்களுக்கு முகம் மட்டுமல்ல அவர்களின் அழகை மேலும் இரட்டிப்பாக்கிக் காட்டுவது அவர்களின் கூந்தலைத் தவிர வேறொன்றும் இல்ரல. கருகருவென அலைபாயும் கூந்தல் கொண்ட பெண்களை வர்ணிக்காத ஆண்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு பெண்களின் அழகை மெருக்கூட்டுவதற்கு கூந்தல் மிகவும் இன்றியமையாதது. முன்பெல்லாம் 60 வயதைக் கடந்தாலும் பலருக்கு நரை முடி பிரச்சனையோ? முடி உதிர்வோ கிடையாது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. இளம் வயதிலேயே முடி உதிர்தலிருந்து இளநரையையும் சந்திக்க நேரிடுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஒருமுறையாவது பீர்க்கங்காயைப் பயன்படுத்திப் பாருங்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும் படிக்க: உங்கள் சருமம் பொலிவு பெற வேண்டுமா? இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க


கூந்தலை வலுவாக்கும் பீர்க்கங்காய்:

  • கூந்தலை வலுவுடன் வைத்திருக்க உதவும் பீர்க்கங்காய் ஹேர் பேக் செய்வதற்கு முதலில், நன்கு முற்றிய பீர்க்கங்காயை எடுத்துக் கொள்ளவும். இவற்றை நிழற்காய்ச்சலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதையடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  • இதையடுத்து இந்த பொடியுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உச்சந்தலையில் இருந்து நுனி வரை அப்ளை செய்து உலர விடவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக தலைமுடியை அலசினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை எப்போதும் வலுவுடன் வைத்திருக்க உதவுகிறது.

பீர்க்கங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:

பீர்க்கங்காய் ஹேர் பேக் போன்று பீர்க்கங்காயைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கலாம். காய வைத்து பொடியாக்கி பீர்க்கங்காயை பொடியுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஊற வைக்கவும். இதை மிதமான சூட்டில் சூடேற்றி உச்சந்தலையில் இருந்து நுனி வரை அப்ளை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் தலையை அலசினால் போதும் இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடியை கருமையாக்குகிறது.

Image source - Freepik

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]