image

Papaya Face Pack: குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு விடுகிறதா? பப்பாளி பேஸ் பேக்கைப் பயன்படுத்திப் பாருங்கள்!

பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் என்சைம்கள் குளிர்ந்த காற்றால் ஏற்படக்கூடிய சரும வறட்சியைத் தடுக்கிறது. பப்பாளியுடன் சில அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பேஸ் பேக் தயாரித்து உபயோகிக்கும் போது முகம் எப்போதும் ஜொலிப்புடன் இருக்கும்.
Editorial
Updated:- 2025-12-15, 23:52 IST

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குளிர் வாட்டி வதைக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள் அனைத்தும் பனிக்கட்டிகளாக மாறி ஜம்மு காஷ்மீர் போன்று காட்சியளிக்கிறது. இந்த குளிரிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்ன தான் ஸ்வெட்டர், மப்புலர் போன்ற குளிருக்கு கதகதப்பான ஆடைகள் அணிந்தாலும் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது. ஆம் குளிர்ந்த காற்று சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது,. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் ஒருமுறையாவது பப்பாளி கொண்டு பேஸ் பேக் உபயோகித்துப் பாருங்கள். எப்படி சருமத்தை பொலிவாக்க பப்பாளி உதவுகிறது? இதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது தெரியுமா?

குளிர்காலத்தில் பப்பாளி செய்யும் அற்புதம்:

குளிர்ந்த காற்றால் பெண்களின் சருமம் ஈரப்பதமின்றி சட்டென்று வறண்டு விடக்கூடும். முகத்தில் ஆங்காங்கே வெண் திட்டுக்கள், உதடு வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால் பப்பாளி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் சருமத்தை எப்போது மென்மையாகவும் பொலிவுடனும் வைத்திருக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையும் போது சரும வறட்சியை சந்திக்க நேரிடும். பப்பாளி ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுவதால், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொண்டு வறண்ட சருமம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? வீட்டிலேயே கொரியன் ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தும் எளிய குறிப்பு


பப்பாளியை எப்படி பயன்படுத்துவது?

  • ஒரு கிண்ணத்தில் ஒரு பழுத்த பப்பாளி கூழ், இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவற்றை ஒன்றாக கலந்து பேஸ் பேக் தயாரித்துக் கொள்ளவும்.
  • பின்னர் இதை ஒரு பஞ்சு அல்லது காட்டன் துணியைக் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் அப்படியே விட்டு தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
  • பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தேனில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. சரும வறட்சியையும் தடுக்கிறது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]