
கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் குளிரின் பாதிப்பைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்வெட்டர், ஸ்கார்ப், சாக்ஸ் போன்ற குளிருக்கு இதமான ஆடைகளை அணிவோம். அதே சமயம் குளிர்ந்த காற்றால் ஏற்படக்கூடிய வறண்ட காற்றால் பாதிக்கப்படும் சரும பாதிப்புகளுக்குத் தீர்வு காண மறந்துவிடுகிறோம். இதோ இன்றைக்கு குளிர்காலத்தில் முகத்தைப் பொலிவாக்க மாதுளை பேஸ் பேக் எப்படி உதவுகிறது? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த மாதுளையைப் பயன்படுத்தி பேஸ் பேக் செய்வதற்கு முதலில் கீழ்வரக்கூடிய பொருட்களைத் தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
மாதுளை - அரை கப்
தேன் - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 இயற்கை குறிப்புகள்
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 அற்புத உணவுகள்; முடி உதிர்வு பிரச்சனைக்கு எளிய தீர்வு
மாதுளையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும பாதிப்பிலிருந்துப் பாதுகாக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து குளிர்கால வறட்சிக்கு எதிராக போராடுகிறது. மேலும் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
Image source - Freep
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]