-1765995162052.webp)
சமீப காலங்களாக குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் பல உடல் நல பாதிப்புகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. இது மட்டுமல்ல குளிர்ந்த காற்று சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதோடு சரும பொலிவை இழக்கச் செய்கிறது. இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்றால், விலையுயர்ந்த அழகு சாதன பொருட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைப் பயன்படுத்தி பேஸ் பேக்குகள் தயார் செய்து உபயோகிக்க முயற்சிக்கவும். என்னவென்று தெரியவில்லையென்றால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.
தேன் மற்றும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்து பேஸ் பேக் தயாரிக்கலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சமஅளவு எடுத்துக் கொண்டு நன்கு கலந்துக் கொண்டால் போதும் பேஸ் பேக் ரெடியாகிவிடும். இவற்றை முகத்தை ஒரு 10 நிமிடங்களுக்கு தடவிய பின்னதாக குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும வறட்சியைத் தடுக்கிறது.
மேலும் படிக்க: Hair Fall in Winter: குளிர்காலத்தில் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? முறையாக பராமரிக்கும் முறை இதோ!
தேங்காயை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் போதும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் எப்போது இளமையுடன் இருக்கலாம் என்பார்கள். ஆம் தேங்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும். எனவே தேங்காயை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். இவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிக் கொள்ளவும். அரை மணி நேரத்திற்கு பின்னதாக முகத்தைக் கழுவினால் போதும் முகப்பருக்கள் மற்றும் சரும எரிச்சலைத் தடுக்கிறது.
ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், மஞ்சள் இரண்டையும் நன்கு கலந்து பேஸ் பேக் தயாரித்துக் கொண்டு சருமத்தில் தினமும் அல்லது வாரத்திற்கு இருமுறை அப்ளை செய்யவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமம் எப்போதும் பொலிவுடனும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
குளிர்ந்த காற்றில் அதிகளவில் ஏற்படக்கூடிய வறண்ட சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க தேன் மற்றும் வாழைப்பழ தோல்களை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு ஈரப்பதமான தன்மையை வழங்குவதோடு பளபளப்பான தோற்றத்தையும் பெற உதவியாக உள்ளது.
மேலும் படிக்க: Butter For skin: முக பொலிவிற்கு எப்படியெல்லாம் வெண்ணெய்யைப் பயன்படுத்தலாம் தெரியுமா?
குளிர்காலத்தில் சருமம் அடிக்கடி வறண்டு போவதைத் தடுக்க வேண்டும் என்றால், சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த பேஸ் பேக்கை உபயோகிக்கலாம். இவை உங்களது சருமத்தை ஈரப்பதமாகவம், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]