
குளிர் காலம் ஆரம்பித்தாலே தண்ணீரைத் தொடுவதற்குக் கூட தயக்கம் காட்டுவோம். அப்புறம் எப்படி தினமும் இரண்டு வேளைகளில் குளிப்பது மற்றும் முகத்தைப் பராமரிப்பது. இதனால் சருமத்தில் அதிக எண்ணெய் தன்மை உள்ளவர்களுக்கு அழுக்குகள் படிந்து முகப்பருக்கள் உண்டாகும். பருவ காலங்களில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் சருமத்தில் பருக்கள் முதல் சரும வறட்சியை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு சருமத்தை குளிர்காலத்தில் எப்படி பொலிவுடன் வைத்திருக்க முடியும்? என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
சரும வறட்சியைத் தவிர்க்கவும், பருக்கள் ஏற்படுவதைக் குறைத்து முகப் பொலிவைப் பெற இலவங்கப்பட்மையைப் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், அரை தேக்கரண்டி வெந்தய தூள், எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து பேஸ்ட் போன்று உருவாக்கிக் கொள்ளவும். இதை முகத்தில் பருக்கள் உள்ள இடங்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: Skin care tips: உங்கள் சருமத்தின் பொலிவை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை அவசியம் சாப்பிடவும்
மேலும் படிக்க: நெய் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் அற்புத பயன்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]