
அழகான, அடர்த்தியான முடி என்பது இன்றைய சூழலில் பலரின் கனவு. ஆனால், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால் முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது. வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல உங்கள் உடலுக்குள் ஊட்டமளிப்பதும் மிகவும் அவசியம்.
உங்கள் உணவுமுறையில் சில குறிப்பிட்ட பொருட்களை சேர்ப்பதன் மூலம் முடி உதிர்வை தடுத்து, ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். முடி உதிர்வை தடுக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை இதில் காணலாம்.
முட்டை, பயோட்டின் மற்றும் புரதம் ஆகியவற்றின் களஞ்சியமாகும். முடி என்பது புரதத்தால் ஆனது. எனவே, புரதம் நிறைந்த முட்டை முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்த உதவுகிறது. மேலும், பயோட்டின் முடியின் வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் உணவில் தினமும் ஒரு முட்டையை சேர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான கூந்தலை பெற எளிதான வழி; பூசணி விதை எண்ணெய்யை இப்படி பயன்படுத்தவும்
கீரையில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணம். கீரையில் உள்ள இரும்புச்சத்து உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வேர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ, உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் படிக்க: கூந்தல் அடர்த்தியாக இல்லை என்ற கவலையா? முடி உதிர்வுக்கு தீர்வு தரும் கற்றாழை ஹேர்பேக்
பாதாம், வால்நட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சின்க் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கின்றன. சின்க், முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து முடியை பாதுகாக்கும்.
தயிரில் புரதம் மற்றும் வைட்டமின் பி5 அதிக அளவில் உள்ளன. இதில் இருக்கும் புரதம் முடிக்கு வலிமை சேர்க்கிறது. வைட்டமின் பி5 உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், முடியின் அடர்த்தியையும் இது வலுப்படுத்துகிறது.

நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த ஒரு ஆற்றல் மையம் போன்று செயல்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. கொலஜன் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை தூண்டவும் அவசியம் ஆகும். மேலும், இது முடி நரைப்பதையும் தாமதப்படுத்துகிறது.
எனவே, இத்தகைய ஆரோக்கியமான உணவுகள் மூலம் நம்முடைய கூந்தல் வளர்ச்சியை சீரான வகையில் அடர்த்தியாக மாற்ற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]