herzindagi
image

முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான கூந்தலை பெற எளிதான வழி; பூசணி விதை எண்ணெய்யை இப்படி பயன்படுத்தவும்

முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து ஆரோக்கியமான கூந்தலை பெற பூசணி விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதன் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
Editorial
Updated:- 2025-10-10, 14:59 IST

நாம் அனைவரும் சியா விதை எண்ணெய்யின் நன்மைகளையும், அது நமது சருமத்திற்கும், கூந்தலுக்கும் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் நன்கு அறிவோம். இருப்பினும், நம்மில் பலருக்கு பூசணி விதை எண்ணெய் அதை விடவும் சிறந்தது என்பது தெரியாது.

மேலும் படிக்க: கூந்தல் அடர்த்தியாக இல்லை என்ற கவலையா? முடி உதிர்வுக்கு தீர்வு தரும் கற்றாழை ஹேர்பேக்

 

கூந்தல் உதிர்வதை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்டி, உங்கள் கூந்தலின் தோற்றத்தையும், அமைப்பையும் மாற்றுவதே இதன் முக்கிய வேலை. இதன் முக்கிய நன்மைகள் மற்றும் இதனை பயன்படுத்தும் முறை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 

பூசணி விதைகளின் நன்மைகள்:

 

பூசணி விதைகள் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. இவை ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. மேலும், பெப்பிட்டாஸ் (pepitas) என்று அழைக்கப்படும் பூசணி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், கூந்தலுக்கு உதவும் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. குறிப்பாக, பயன்படுத்துவதற்கு இது மிகவும் எளிதானது.

Hair care tips

 

கூந்தலுக்கு கிடைக்கும் பயன்கள்:

 

பூசணி விதை எண்ணெய் ஒரு மிதமான அடர்த்தி கொண்ட எண்ணெய். இது உச்சந்தலையையும், கூந்தல் இழைகளையும் ஈரப்பதமாக்குகிறது. இதனால் வறண்ட கூந்தல் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். இதனை சுமார் 4 தேக்கரண்டிகள் பயன்படுத்துவதே போதுமானது. வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பூசணி விதை எண்ணெய் கூந்தலை வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க: பளபளக்கும் சருமம் வேண்டுமா? உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய பழங்களின் லிஸ்ட் இதோ!

 

இதில் பயோட்டின் மற்றும் வைட்டமின் பி ஆகியவையும் உள்ளன. இது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதுடன், பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராடுகிறது. இதன் மூலம் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.

Hair care routine

 

பூசணி விதை எண்ணெய்யை பயன்படுத்தும் முறை:

 

பூசணி விதை எண்ணெய்யை நேரடியாக எடுத்து, கூந்தலின் பிரிவுகளில் சமமாக பரப்பவும். உச்சந்தலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் கூந்தலின் முனைகள் வரை தடவவும். இதை சுமார் 12 முதல் 24 மணி நேரம் வரை அப்படியே விடலாம். இந்த நேரத்தில் தொப்பி அணிவதையோ அல்லது உங்கள் கூந்தலை சுற்றிக் கட்டுவதையோ தவிர்க்கவும். இப்படி செய்யும் போது அதன் ஊட்டச்சத்துகள் அனைத்தும் முழுமையாக உறிந்து கொள்ளப்படுகிறது.

 

அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் மிதமான ஷாம்பூ பயன்படுத்தி குளித்து விடலாம். இந்த செயல்முறையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பின்பற்றினால் நல்ல பலன்களை பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]