-1762884312503.webp)
பெண்கள் தங்களது முகத்தைப் பொலிவாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வீட்டில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க முடியும். இதோ என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: கெரட்டின் அளவை ஊக்குவித்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
சருமம் பொலிவுடன் வைத்திருக்க ஆரஞ்சு பழத்தின் தோல் பவுடருடன் தயிர் சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போன்று பயன்படுத்தவும். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிமைக்ரோபில் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதோடு முகப்பொலிவைத் தருகிறது.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு முறை
எலுமிச்சை சாற்றுடன் முட்டை வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போன்று பயன்படுத்தவும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை இந்த பேஸ் பேக்கைப் பயன்படுத்தவும் இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், எப்போதும் இளமையானத் தோற்றத்தைத் தர உதவுகிறது.
வெண்ணெய் பழம் எனப்படும் அவகோடா பழத்தை நன்கு மசித்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வரவும். இதில் உள்ள லூடின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் தோலை மிருதுவாக்குவதோடு சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது.
பூசணிக்காயை நன்கு அரைத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ் பேக் தயார் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ச்சியாக முகத்தில் தடவி வரும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது.
இதோடு மட்டுமின்றி வைட்டமின் கே, வைட்டமின் பி, பி3, வைட்டமின் சி மற்றும் வைட்டமின்கள், மினரல்கள் கொண்ட தக்காளி, சருமத்திற்கு எப்போதும் பிரகாசத்தைக் கொடுக்கும் வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட், பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்த கேரட், உருளைக்கிழங்கு, இலை காய்கறிகளான காலே போன்றவற்றையும் பேஸ் பேக் போன்று பயன்படுத்தி சருமத்தைப் பொலிவாக்க முயற்சி செய்யவும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]