
குளிர்காலம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால், பெற்றோர்களுக்கு அது சற்றே கவலைக்குரிய காலம். ஏனெனில், இந்தக் காலக்கட்டத்தில் தான் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வைரஸ் தொற்றுகள் குழந்தைகளை எளிதில் தாக்கும். பெரியவர்களை விடக் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருப்பது தான் இதற்கு காரணம்.
நாம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். குளிர்காலத்தில் குழந்தைகளின் உடல் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சில குறிப்பிட்ட பருவகால உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொடுப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டிய 5 முக்கிய குளிர்கால உணவுகள் குறித்து இதில் காண்போம்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்றவை வைட்டமின் சி-யின் ஆற்றல் மையம் போன்றது.
சில குழந்தைகளுக்கு சிட்ரஸ் பழங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, ஆரம்பத்தில் குறைந்த அளவில் கொடுத்து பார்க்க வேண்டும். ஏதேனும் ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டால் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ
பாதாம், வால்நட், சூரியகாந்தி விதைகள் போன்றவை குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் தருகின்றன.

குளிர்காலத்தில் பரவலாக கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சிறந்தது. இது இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் போன்றவை குளிர்காலத்தில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவை. இவற்றில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.

குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், குழந்தைகளுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய காளான் சிறந்த தேர்வாகும்.
குளிர்காலம் குழந்தைகளை முடக்கிப் போடாமல் இருக்க, இந்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களின் தினசரி டயட்டில் சேர்ப்பது பெற்றோரின் கடமையாகும். இதன் மூலம் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]