
குளிர்காலத்தின் போது நம் உணவுப் பழக்கம் சற்று மாறுபடும். சூடான பஜ்ஜி, போண்டா மற்றும் எண்ணெய் பலகாரங்களை விரும்பி சாப்பிடும் காலம் இது. அதே சமயம், குளிர்காலத்தில் நமது செரிமான மண்டலத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும். இதனால் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உடலில் தேங்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, உடலின் மிக முக்கியமான உறுப்பான கல்லீரல் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கல்லீரல் என்பது நம் உடலை சீராக சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. நாம் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் நுழையும் நச்சுகளை வடிகட்டி வெளியேற்றுவது இதன் முக்கிய பணியாகும். குளிர்காலத்தில் அதிகப்படியான கலோரி நிறைந்த உணவுகளை உண்பது கல்லீரலுக்கு கூடுதல் சுமையை அளிக்கும். எனவே, இந்த சீசனில் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நச்சுகளை இயற்கையாக வெளியேற்றவும் சில உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது அவசியம். கல்லீரலை பாதுகாக்கும் 5 உணவுகள் குறித்து இதில் விரிவாக காண்போம்.
கல்லீரலை சுத்தம் செய்வதில் சிட்ரஸ் பழங்களுக்கு தனி இடமுண்டு. அதிலும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சையின் பங்கு மிக முக்கியமானது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இது பித்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ
சாதாரண பால் டீ அல்லது காபிக்கு மாற்றாக கிரீன் டீ குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது. இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது கூடுதல் பலன் தரும்.
மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று நமக்கு தெரிந்த வால்நட், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
தினமும் 2 அல்லது 3 வால்நட் பருப்புகளை சிற்றுண்டியாக சாப்பிடலாம். அவற்றை நன்கு மென்று சாப்பிடுவது அவசியம்.
மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
பூண்டு ஒரு இயற்கை மருத்துவக் களஞ்சியம். இதன் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இது கல்லீரலுக்கு செய்யும் நன்மை மிகப் பெரியது.

இதற்காக, தினமும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காலையில் ஒரு பல் பூண்டை சாப்பிடுவது மிகுந்த பலன் தரும்.
தினசரி சமையலில் பயன்படுத்தும் வெங்காயம், கல்லீரலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை சாலட் வடிவிலோ அல்லது சமையலிலோ சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த உணவுகளை உங்கள் குளிர்கால டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கல்லீரலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். உணவுகள் மட்டுமின்றி, தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான தூக்கம் ஆகியவையும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]