ஆரோக்கியமான மாதவிடாய்க்கு சில குறிப்புகளை பின்பற்றலாம். பெண்களின் உடலில் அடிவயிற்று பகுதியில் சிறுநீர்ப்பை, கருப்பை, புணர்புழை மற்றும் மலக்குடல் ஆகியவை கொண்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் அடிக்கடி அடிவயிற்று வலிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அடிவயிற்று பகுதியில் அரிப்பு, துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு பிரச்சனைகள் மாதவிடாய் காலங்களில் இருந்தால் இவை மாதவிடாய் தொற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அவற்றை புறக்கணிக்கமால் உடனடியாக அதை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த வலியை பற்றி உணவியல் நிபுணர் மன்பிரீத் வழங்கிய சில எளிய உதவிக்குறிப்புகளை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்புளில் தினமும் சந்தன எண்ணெயை தடவினால் உடலில் நிகழும் அதிசைய நன்மைகள்
உணவின் நடுவில் புரோபயாடிக்குகள் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வலிக்கு காஞ்சி ஒரு நல்ல மருந்தாக செயல்படும். காலை 11 மணியளவில் காஞ்சியை மத்திய உணவாக சாப்பிடலாம். பிறப்புறுப்பில் இருந்து வரும் துர்நாற்றத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
அடிவயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற மஞ்சள் தேநீரை காலையில் வெறும் வயிற்றில் கூடிக்கலாம். 1 கிளாஸ் கொதிக்கும் நீரில் 1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து. பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து குடிக்கவும். இது ஒரு அழற்சி எதிர்ப்பு பானமாகும் அடிவயிற்று வலி மற்றும் பிடிப்புகள் குறைக்கிறது.
மாலையில் ஒரு கைப்பிடி சியா விதைகள் சாப்பிடுங்கள் அல்லது மதிய உணவுக்குப் பிறகு சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆந்தோசயனின் எனப்படும் உயிர்வேதியியல் கலவை உள்ளதால் சிறுநீர் பாதையில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றி, பிறப்புறுப்பில் தொற்றுகள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது, இதனால் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: 20 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் போதும்.. இத்தனை பிரச்சனையும் தீருமாம்!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]