முந்தைய காலங்களில் வாழ்ந்த தலைமுறையினரின் உணவு முறை, பழக்க வழக்கங்கள், வாழும் முறை ஆகியவை முற்றிலும் வேறாக இருந்தது. அதனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஆயுட் காலம் அதிகமாக இருந்தது. நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர். வயதானாலும் இளமையுடன் தோன்றிட வாய்ப்புகள் இருந்தன.
இப்போது கால சூழ்நிலை மாறி நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நாம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டதால் இளம் வயதிலேயே பலருக்கு முதுமை தன்மை தாக்கம் ஏற்படுகிறது. 50 வயதிலேயே சிலர் 70 வயதான நபர் போல காட்சியளிக்கின்றனர். எனவே இளமையில் முதுமையை தவிர்க்க வேண்டுமானால் முதுகு எலும்புகள் வலுபெறக்கூடிய சில ஆசனங்களை செய்ய வேண்டும்.
ஆசனங்கள் செய்யும் போது முதுகு எலும்பு அடுக்குகளில் இருக்ககூடிய நரம்புகள் தூண்டப்பட்டு இளமையோடு இருக்க வழி செய்கிறது. அதே போல மேலை நாடு உணவு பழக்கத்திற்கு மாறி வருவதால் சீக்கிரமே முதுமை ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பச்சிமோத்தாசனம் எனும் முகம் மூட்டு தொட்டாசனம் செய்யும் போது முதுகு தண்டில் இருக்கக்கூடிய எலும்புகளும், சக்தி மையங்களும் தூண்டப்படுகின்றன.
முதலில் இரண்டு கால்களையும் முன்நோக்கி நேராக நீட்டி பாதங்களையும் ஒட்டி வையுங்கள். மூச்சை லேசாக உள்ளே இழுத்து கொண்டு கைகளை மேலே உயர்த்தி மீண்டும் லேசாக மூச்சை விட்டுக் கொண்டே கால் பாதங்களைத் தொட முயற்சிக்கவும்
மேலும் படிங்க கை நடுக்கம் ஏற்படாமல் இருக்க சந்தோலனாசனா செய்யுங்க
முதுகு தண்டில் பிரச்சினை மற்றும் வயிறு தொப்பை இருந்தால் இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் சிரமமாக இருக்கும். தொடர்ந்து இதை முயற்சிக்கும் போது முதுகில் நெகிழ்வுதன்மை ஏற்படும். மறுபடியும் மூச்சை உள்ளே இழுத்து கொண்டு கைகளை மேலே உயர்த்தவும். இயல்பு நிலைக்கு திரும்பும் போது முதுகு நேராக இருக்க வேண்டும்.
யோகாசனங்களில் முதுகு தண்டை சிறப்பாக இயக்க கூடிய ஆசனம் என்றால் அது பச்சிமோத்தாசனம் தான். விஞ்ஞான ரீதியாகவும் இந்த ஆசனத்தின் பலன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கைகளை கீழ் இருந்து மேல் நோக்கி உயர்த்தும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை விட்டுக் கொண்டே பாதங்களை நோக்கி கைகளை எடுத்துச் சென்று கால் விரல்களை பிடிக்கவும்.
மேலும் படிங்க உற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்
இந்த ஆசனம் செய்யும் போது முதுகு தண்டின் அளவு இயல்பு நிலையில் 19 அங்குலத்தில் இருந்து 24 அங்குலம் வரை செல்லும். குறைந்தது ஐந்து அங்குலம் உயரும். பச்சிமோத்தாச்சானத்தில் முதுகிற்கு நெகிழ்வுத் தன்மை கிடைத்து சுறுசுறுப்புடன் இருக்க முடியும். இதனால் இளமையில் முதுமை தன்மை தவிர்க்கப்படும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]