Garudasana benefits : உற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்

உங்களின் உற்று நோக்கும் திறனை மேம்படுத்த கருடாசனம் மற்றும் விருட்சாசனம் செய்து பாருங்கள். அதற்கான வழிகள் எங்கே 

garudasana procedure

மன அழுத்தம் மற்றும் உடல் சார்ந்த இயக்கங்களில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு காலையிலோ அல்லது மாலையிலோ அரை மணி நேரம் யோகாசனங்கள் செய்தால் அவை சரியாகிவிடும். பொதுவாக இருக்கையில் அமர்ந்தே இருப்பது, அதிக நேரம் பயணம் மேற்கொள்வது நமது முதுகு எலும்புக்கு மிகுந்த அழுத்ததை கொடுக்கும்.

அதனால் வேலைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு அழுத்தம் குறைவதற்கு யோகாசனம் மூலம் சிகிச்சை அளிக்கலாம். மல்லாந்து படுத்துவிட்டு முதுகிற்கு கீழ் தலையணை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு படுத்திருந்தால் எலும்புகளில் ஏற்படும் இருக்கும் அழுத்தம் குறையும். முதுகு எலும்புகளை வருடி விட்டது போல் இருக்கும். எனவே தினமும் முறைப்படி யோகா செய்து கொண்டே இருந்தால் நிச்சயமாக நோய் வராது, நோய் எதிர்ப்பு ஆற்றுலும் அதிகரிக்கும்.

அந்த வகையில் நின்ற நிலையில் செய்யக்கூடிய ஆசனம் ஒன்றை பார்க்கப்போகிறோம். உற்று நோக்கும் திறனுக்கு இது சிறந்த ஆசனமாகும். மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கும், குறிக்கோளை ஏதுவாக அடைவதற்குமான சிறந்த ஆசனமாகும். நின்ற நிலையில் இடது காலை மெதுவாக முன்புறம் தூக்கி பின்புறம் கொண்டு வந்து இடது காலின் பெரும் விரலை ஒரு சுழற்று சுழற்றி வலது முழங்காலுக்கு கீழ் பிடிக்க வேண்டும்.

garudasana

மேலும் படிங்க கை நடுக்கம் ஏற்படாமல் இருக்க சந்தோலனாசனா செய்யுங்க

இயல்பாகவே நமக்கு வயதாகும் போது தொடையில் தசை அதிகரிக்கும். ஆனால் ஆசனங்களை தொடர்ந்து செய்யும் போது தசைகள் பெருகாது. கால்கள் போல கைகளையும் சுழற்றி வணங்கி அஞ்சலி முத்திரை நிலையில் நிற்க வேண்டும். இந்த ஆசனத்திற்கு கருடாசனம் எனப் பெயர்.

இந்த ஆசனத்தில் உடம்பும் சுற்றப்பட்டு, கைகளும் சுற்றப்பட்டு இருக்கிறது. ஆசனம் செய்யும் போது மூட்டு பகுதியிலும் நல்ல அழுத்தம் கிடைக்கிறது. கைகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பது முழங்கை சார்ந்த எழும்புகளும் நன்கு தூண்டப்படுகிறது. தற்போது கைகளைப் பிரித்துவிட்டு படிப்படியாக ஓய்வு நிலைக்கு வாருங்கள்.

அடுத்ததாக விருட்சாசனம் பற்றி பார்க்கப் போகிறோம். முதலில் நேராக நின்று இரண்டு பாதங்களையும் ஒட்டி வைக்க வேண்டும். பிறகு படிப்படியாக இடது காலை உயர்த்தி வலது காலின் தொடைப் பகுதியில் வைக்க வேண்டும். இதை ஒற்றை காலிலே தவம் செய்வது என்று சொல்வார்கள்.

மேலும் படிங்கஉடல் வலிமை பெறுவதற்கு தனுராசனம் செய்யுங்கள்

இது உற்று நோக்கும் ஆற்றலை அதிகரிக்கும். தவக் காலத்தில் முனிவர்கள் இந்த ஆசனத்தை செய்வார்கள். விருட்சாசனம் செய்வதால் உடலில் உள்ள சக்கரங்கள் நன்றாக இயக்கப்படுகிறது. மீண்டும் படிப்படியாக ஓய்வு நிலைக்கு வாருங்கள். முதலில் பயிற்சி செய்யும் போது கடினமாக இருக்கும், ஆனால் தொடர்ந்து செய்யும் போது ஆற்றல் கிடைக்கும். இந்த இரண்டு ஆசனங்களையும் படிப்படியாகத் தொடர்ந்து செய்யும் போது உங்கள் உடல் வைரம் பாய்ந்த உடலாக மாறும்.

வயது மற்றும் உடல்எடையை கவனத்தில் கொண்டு ஆசனப்பயிற்சி செய்யுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP