கை என்றால் மொத்தமாக முழங்கை, கை விரலகள், மணிக்கட்டு பகுதி அதே போல புஜம் என்று சொல்லக்கூடிய தோல் பகுதி என அனைத்தும் சிறப்பாக இயங்கி கொண்டிருந்தால் தான் நம்மால் கைகளை கொண்டு பணிகளை செய்ய முடியும். எழுத்து வேலை அதிகம் கொண்ட நபர்கள், கைகளை கொண்டு அதிகமான பணியை செய்யக்கூடிய வேலையில் இருப்பவர்கள், கைகளை கொண்டு பல்வேறு சுழற்சி பயிற்சிகளை செய்யக்கூடியவர்கள், பணி நிமித்தமாக கைகளை அதிகமாக பயன்படுத்துவோருக்கு கைகள் வலுவாக இருக்க வேண்டும்.
கைகளில் ஏற்படக்கூடிய நடுக்கம், வலி, தோள்பட்டை வலி, கைகளில் இரத்த ஓட்டம் இல்லாமல் மரப்பு போதல் ஆகியற்றை மாற்றக் கூடிய ஆற்றல் யோகாசனத்தில் இருக்கிறது. கைகள் உறுதி பெற வேண்டுமானால் தமிழில் அங்க சமநிலை ஆசனம் எனும் யோகாசனத்தை செய்ய வேண்டும். இதற்கு சமஸ்கிருதத்தில் சந்தோலனாசனா என பெயர்.
இந்த ஆசனத்தை தொடர்ச்சியாக செய்து வந்தால் கைகள் உறுதி பெறும். பத்து விநாடிகள் கூட அங்க சமநிலை ஆசனம் செய்தால் போதுமானது.
சந்தோலனாசனா
- சாதாரணமாக உட்கார்ந்து இடுப்புக்கு நேராகத் தரையில் கைகளை வைக்க வேண்டும். கால்களை பக்கவாட்டில் நீட்டுங்கள்.
- கை விரல்கள் முன்னோக்கி இருப்பது அவசியம். மெதுவாகப் படிப்படியாக உடலை மேலே தூக்குங்கள். உங்களுடைய கை சமமாகத் தாங்கி நிற்க வேண்டும்.
- இதற்கு அங்க சமநிலை ஆசனம் என்று பெயர். தற்போது மொத்த உடல் எடையும் முழங்கையில் தாங்கப்பட்டு விரல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும், மணிகட்டு உறுதியடையும், அதே போல புஜங்களுக்கு சிறப்பான பயனை தருகிறது.
- பத்து விநாடிகளுக்கு பிறகு ஓய்வு நிலைக்கு வந்துவிடுங்கள். இது முதல் நிலையாகும்.
- இரண்டு கைகளின் விரல்கள் மற்றும் கால்களின் விரல்களில் உடல் எடையைத் தாங்கி நிற்பது அங்க சமநிலை ஆசனத்தின் இரண்டாவது நிலையாகும்.
- இயல்பு நிலைக்கு திரும்புங்கள். தற்போது கால்களை நேராக நீட்டி கைகளை பின்நோக்கி வைத்து உடலை உயர்த்துவது அங்க சமநிலை ஆசனத்தின் மூன்றாவது நிலையாகும்.
- இந்த ஆசனம் செய்வதால் கை விரல்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்
- மீண்டும் முதலில் இருந்து மூன்று நிலைகளையும் செய்யுங்கள்.
- உடல் எடை அதிகமாக இருப்பதால் விரல்களை மட்டுமே பயன்படுத்தி எடையை தாங்க முடியவில்லை என நினைத்தால் இந்த ஆசனம் எடையை குறைக்கவும் உதவும்
- ஆசனம் செய்யும் போது கைகளுக்குள் இடைவெளி ஒரு அடி இருக்க வேண்டும். இடுப்பு பகுதி சமமாக இருக்க வேண்டும்.
- கால் விரல்களும், கை விரல்களும் மட்டுமே உடலை தாங்குவது அவசியம். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கை நடுக்கம் ஏற்படாது.
- இந்த ஆசனத்தின் ஒவ்வொரு நிலையையும் பத்து விநாடிகளுக்கு இரண்டு முதல் மூன்று முறை காலை மற்றும் மாலை நேரங்களில் செய்யவும்.
- விரும்பினால் ஒவ்வொரு நிலையையும் 20 விநாடிகளுக்கு கூட செய்யலாம்.
கைகள் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை வழமாக இருக்கும். நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆசனம் உதவிகரமாக அமையும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation